வெள்ளி, 5 மார்ச், 2021

திமுக விசிக தொகுதிப்பங்கீடு ! .. இணைய போராளிகள் என்ன கூறுகிறார்கள்?

Kiruba Munusamy : · சனாதனத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை காக்கும் கடமை விசிகவிற்கும் கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் தான் இருக்கிறதா என்ன? கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. இந்த தேர்தலில் கலைஞர் இல்லை. இவற்றை குறித்த எந்த அச்சமும் இல்லாமல் திமுக நடந்துக்கொள்ளும் போது, விசிக மட்டும் ஏன் சமரசம் செய்ய வேண்டும்? இதனால் தலித்துகளுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட போகிறதா இல்லை ஜாதிய வன்முறைகள் தான் குறைந்துவிட போகிறதா? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது ஒடுக்கப்பட்டோருக்கு ஒன்றுதானே! இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் விளிம்புநிலை மக்களின் பிரதிநிதியான விசிகவை வஞ்சிக்கிறது திமுக. ஜனநாயகத்தை காக்கும் பொருட்டு பெருந்தன்மையாக பொறுத்து போகிறார் தோழர் திருமா. சமூகநீதியின் அடிப்படையே அதிகாரத்தை பரவலாக்குவது தான். இதை முற்றிலும் மறந்து, தான் மட்டும் ஏகபோகமாக அனுபவிக்க நினைக்கும் திமுக எந்த வகையில் சனாதனத்திற்கு எதிரானது?

சாய் லட்சுமிகாந்த் : அப்ப திமுகவில் இருக்கும் பட்டியலின சகோதரர்களின் நிலை?? திமுகவில் பிரதிநிதித்துவம் இல்லை என்பவர்கள் கூட திமுகவினரின் பட்டியலின மக்களுக்கு எதிராக பேசலாமா?? 

Joe Milton : இரண்டு பேர் பாராளுமன்றத்துக்கு சென்றதையெல்லாம் வசதியாய் மறந்துவிட்டு இது போல ஏதாவது சொல்லாவிட்டால் போராளி மோடில்  இருக்க முடியாது என்பதால் சொல்வது போலிருக்கிறது..  

 Arul Thambi - Joe Milton : இருண்ணா கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரட்டும்.. 

Joe Milton : உங்களைப் போன்றவர்களெயெல்லாம் மீறி அண்ணன் திருமா இவ்வளவு முதிர்ச்சியை கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.. கரு. திருநாவுக்கரசு : விசிகவின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டாமா? தலித் மக்களின் கோரிக்கைகளை முன்னெடுக்க வழிவகை வேண்டாமா? வேண்டுமெனில் அனுசரித்துப் போவது தான் புத்திசாலித் தனம் என்று தோழர் திருமா முடிவெடுத்திருக்கிறார்...

Jeyaganapathi V : விசிக வில் மட்டுமே சனாதனத்தை எதிர்க்கும் கொள்கைவீரர்கள் இல்லை. விசிக வில் மட்டுமே ஒடுக்கப்பட்டோர் இல்லை. விசிக வில் மட்டுமே சிறுபான்மையினர் இல்லை. திமுக விலும் இப்பிரிவினர் விசிக விடவும் பலமடங்கு அதிகமாக உள்ளனர். திமுக விலும் இப்பிரிவினருக்கு இடம் வழங்க அவர்களை ஜெயிக்க வைத்து சனாதனத்தை வேரறுக்க வேண்டிய பொறுப்பும் விசிக வை விடவும் திமுக வுக்கு உள்ளதே சகோதரி. இதனை புரிந்து கொண்டதால் தான் திருமா 6 சீட்டுகளுக்கு ஒத்துக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளார். தயவுசெய்து நீங்களும் புரிந்து கொள்ள முயற்சிக்கவும்... 

Somas Kandhan : சிதம்பரத்தில் திருமா வெல்ல வேண்டுமென இரவு முழுவதும் காத்திருந்து வெற்றியை கொண்டாடியவர்கள், சிவசங்கர் எப்படி எல்லாம் உழைத்தார் என திருமா அவர்களுக்கு நன்கு தெரியும், பொது வெளியில் பேத ரீதியில் கருத்துக்களை வெளியிடுவது கசப்பினையே உருவாக்கும்,... 

Bilal Aliyar : திமுக கூட்டணியில் மதிக்கத்தக்க, ஏற்க்கத்தக்க தொகுதிகளை பெற்று மதிமுக, விசிக, இடதுசாரி தோழர்கள் நிற்கும் அனைத்து தொகுதிகளிலும் வென்று சட்டமன்றம் செல்வார்கள்.. டாட்.. #VoteforDMKAlliance #VoteForDMK 

 Sumi B : மநகூவை மறந்து மனசாட்சி இல்லாமா பேசறீங்ககளே...... இது போல பேசி ஜெயிக்கிற வாய்ப்பை கெடுத்துக்க வேண்டாம்.....

Sumi B எல்லா கட்சிக்கும் இது வாழ்வா சாவா போராட்டம்..... பிஜேபியின் அட்டூழியங்களை மனசுல வச்சி போஸ்ட் போடுங்க..... 

Arulmozhi Kanagu உங்களுக்கு திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இணைவது தான் பிரச்சினை போல ஏன் திமுகவில் அருந்ததியர்கள் இல்லையா பள்ளர் பறையர் இல்லையா.. அவர்கள் எல்லாம் முக்கியப் பதவிகளில் இல்லையா கொஞ்சம் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.. 

Srivath Muthukumar : மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி. இது திமுகவின் நிலைபாடு. அதிகாரம் பரவலாக்கப்படவே ரிசர்வ் தொகுதிகள். விசிக வளரவேண்டும் என்றே ஆரம்பம் முதலே கலைஞர் விசிகவை அரவணைத்து சென்றார். அதை தொடர்ந்தே ஸ்டாலினும் திருமாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். எனவேதான் பாராளுமன்ற தேர்தலில் 2 எம்பிக்களை விசிகவில் இருந்து வெற்றி பெறச்செய்தது. (வழக்கத்திற்கு மாறாக திமுக குறைந்த தொகுதியில் போடடி இட்டதுக்கும் அதுதான் காரணம். இத்தனைக்கும் திமுக தனித்து நின்றாலும் வெற்றி பெறும் என்ற சூழலிருந்தது. திருமாவளவனார் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகள்தாம் அவர் கட்சி வளர்ச்சிக்கான பின்னடைவு. இந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக திமுக வெற்றி பெறுவது மிக மிக அவசியம் என்றே அதிக எண்ணிக்கையில் திமுகவும் ஏனைய இடங்களில் கூட்டணி கட்சிகளும் போட்டி இடுகிறது. இதை உணர்ந்தே கூட்டணி தலைவர்களும் ஒப்புணர்வோடு செயல் புரிகிறார்கள். 

Anbu Mani : அப்படியே அதிமுக கூட்டணியில் பூவை ஜெகன் மூர்த்தி செகு தமிழரசன் கிச்சா போன்ற வர்களுக்கு தலா இருபது தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுப்போம்.. 

Anbu Mani : மநகூ வில் மனம் குளிரும் அளவுக்கு இடங்களைப் பெற்று போட்டியிட்டோம். அந்த ஃபீல் இப்போது கிடைக்கவில்லை. அதனால் திமுக ஒரு சனாதன சக்தி. 

Muthu Selvam : வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் பாஜக-வினரிடம் விலை போகாமல் இருக்கப் போவது கம்யூனிஸ்ட் மற்றும் விசிக மட்டுமே. அப்போது திமுக இவர்களை நாடி வருவார்கள். 

Ameen Mohamed : சிறுத்தைகளுக்கு அதிக தொகுதி கொடுக்காத திமுகவுக்கு எதிராக வாக்களித்து சனாதனதிர்க் கு எதிராக போராடுவோம்.. இப்படிக்கு elite போராலீஸ்... 

 போராளி வீரத்தாய் ஆ.இராணி : அப்படியே அருந்ததியர் பிரதிநித்துவம் பற்றி சேர்த்து சிந்திக்க எண்ணுங்கள் தோழர்.... 

Vijaya Baskar M : Well said... நான் இதனை வழிமொழிகிறேன்... 

 Anbu Mani : திமுக விளிம்பு நிலை மக்களின் கட்சி இல்லை. தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை எல்லோரும் கிராஸ் பெல்ட் போட்ட கார்ப்பரேட் கள் தான். ஏ கார்ப்பரேட் திமுகவே நீ ஆறு இடத்தில் போட்டி இடத் தயாரா? 

பார்த்திபன் குமார் : Ground reality is different if you contest in vck symbol it is Heard to win today 

Sasidharan Sari : ஆறிலும் இழுபறி இல்லாமல் மகத்தான வெற்றியை உறுதி செய்து விட்டு பிறகு விமர்சனம் செய்வோம். 

 Inamul Hasan : 2016 இல் தலைவர் முதவராக ஆகுவத்ற்கான கடைசி தேர்தலில் திருமா ம.ந.கூட்டணி அமைத்து திமுகவுக்கு எதிராக நின்றார். அதையெல்லாம் மறந்து திமுக பெருந்தனமையோடு நடந்து கொண்டுள்ளது.

Thambi Dhurai Mba : Inamul Hasan 2016 தேர்தலில் தனியாக நின்றதற்கு யார் காரணம் உங்கள் தலைமை அப்போது விசிக வை கண்டு கொள்ள இல்லை கூட்டணி ஆட்சியை ஏற்க உங்களுக்கு மனமில்லாமல் நீங்கள் உதாசினம் செய்யதீர்கள் அதனால் வெளியேறும் சூழல் ஏற்பட்டது நீங்களே சிந்தியுங்கள் தமிழகம் முழுவதும் விசிக வாக்கு வங்கி எந்த விதத்திலும் குறைந்தது அல்ல கணிசமான வாக்கு வங்கி கொண்ட கட்சி ஆனால் இதை ஏற்க உங்கள் தலைமை தயங்குகிறது என்பதுதான் மன வேதனை இருந்தாலும் கூட்டணி தர்மத்தை மதிக்கிறோம் சனாதன சக்திகளிடமிருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க பாடுபடுவோம்...

 Vettothi Sundaram : Thambi Dhurai Mba விளிம்பு நிலை மக்களின் குரலான விசிக, இப்ப ஒதுக்கி இருக்குற ஆறு சீட்ல 2 பறையருக்கு, 2 பள்ளருக்கு, 2 அருந்ததியர்க்கு (1 மடிகா + 1 தோட்டி/மாடாரி) கொடுக்குமா விசிக? லோக் சபா 2019 ல விசிக வுக்கு ஒதுக்குன 2 சீட்ல ஏன் ரெண்டுமே பறையருக்கு கொடுத்தது விசிக? சமூக நீதி என்பதே திமுகவின் கடமை மட்டுமா? ஏன் விசிக தன் கட்சிக்குள்ளேயே சமூக நீதி வழங்குவதில்லை. 

 Thambi Dhurai Mba : Vettothi Sundaram சுயசாதி பெருமை பேசும் கட்சிகளிடம் இந்தக் கேள்வியை கேளுங்கள் ஒட்டுமொத்தமாக ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் தலித்து என்ற பொருளில் களம்காணும் இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சி..

Thambi Dhurai Mba : Vettothi Sundaram விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காக எந்த சமரசமும் இன்றி போராடும் கட்சி விடுதலைச் சிறுத்தை கட்சி...

 Prasanna Balaji : 2016 மக்கள் நல கூட்டணி அமைத்து பாசிச ஆட்சி வந்தது போதாதா. எத்தனை தொகுதி என்பதை விட எத்தனை mla வெற்றி என்று பாருங்கள்... 

 Tamil Vds : அய்யா எங்க கழகத்திலும் அவங்களுக்கு சீட் உண்டு... காட்பாடி உமாபதியார் சந்தான கிருஷ்ணன் : பிரச்சனை அதுவல்ல, விசிக வால் அதிமுக பண பலத்தோடு மோத முடியாது, அதிகமான சீட் அதிமுக வெற்றிக்கு வழி வகுத்துவிடும். 

Yasser AK : திமுகவில் தலித்துகள் இல்லையா? அல்லது இஸ்லாமியர்கள் இல்லையா? அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லலையா? தலித்துகளுக்கு விசிகதான் அடையாளமா? வேறு கட்சிகள் இல்லையா?

Mappillai Moideen : Prathaban Jayaraman திமுகவின் தற்போதைய பங்கீட்டில் கறாராக இருப்பதற்கு காரணம். பார்டரில் வெற்றி பெற்றால் பாஜகவின் ஆள்பிடிக்கும் வேளை தமிழகத்திலும் தொடங்கி விடும் .அதிகபட்சமான தொகுதிகளில் போட்டியிட்டால் தான் எங்களுக்கு நல்லது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக