சனி, 20 மார்ச், 2021

கோயில்களை அறநிலைய துறையிடம் இருந்து மீட்கவேண்டும் என்று துடிப்பது ஏன்?

இளமாறன் (Elamaran) (@elaoffl) | Twitter
முட்டாள் சங்கி:- கோயில்களை மீட்க வேண்டும்.
யாரிடம் இருந்து?
முட்டா சங்கி:- அரசிடம் இருந்து.
அரசு யாரை வைத்து கோயிலை நிர்வகிக்கிறது?
முட்டா சங்கி:- அறநிலையத் துறையை வைத்து.
அறநிலையத் துறையில் யார் வேலை செய்கிறார்கள்?
முட்டா சங்கி:- இந்துக்கள்.
இந்துக்களில் எந்த சாதி?
மு.ச:- அனைத்து சாதி இந்துக்களும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.
அப்போ, நாடார்கள்?
மு.ச:- ஆமாம். வேலை செய்கிறார்கள்.
வன்னியர், தேவர், கவுண்டர்கள்?
மு.ச:- ஆமாம். வேலை செய்கிறார்கள்.
பள்ளர், பறையர், அருந்ததியர்?
மு.ச:- அவர்களும் வேலை செய்கிறார்கள்.
அறநிலையத் துறை வருவதற்கு முன் யார் கோயில்களை நிர்வகித்தார்கள்?
மு.ச:- பிராமணர்களும், ஊரில் பணக்காரர்களாக இருந்த தர்மகர்த்தாக்களும் மற்றும் ஜமீன்தார்களும்.
அறநிலையத் துறை வருவதற்கு முன் கோயில்களில் நாடார்கள் மற்றும் இன்றைய தலித் மக்களின் நிலை என்ன?
மு.ச:- கோபுர தரிசனம் தான். கோயிலுக்கு உள்ள விடுங்க; கோயில் இருக்கும் தெருக்களுக்குள் கூட இன்றைய தலித் மக்களுக்கு அனுமதி இல்லாமல் தானே இருந்தது.
அப்போ, ஜக்கி வாசுதேவ் என்னும் இந்த மலைமுழுங்கி சொல்லுவதைப் போல, இந்துக்கள் நிர்வகித்த கோயில்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் இந்துக்களே போக முடியாத சூழல் இருந்துச்சு, அப்படித் தானே?
மு.ச:- ஆமாம்.. ஆமாம்.
இப்போ, எந்த இந்துக்களை கோயில்களுக்குள் அனுமதிக்காமல் தூரமா வைச்சிருந்தாங்களோ, அந்த இந்துக்களில் ஒருத்தர் நிர்வாக அதிகாரியாக இருந்து கோயிலை நிர்வகிக்கிறார், அப்படித் தானே?
மு.ச:- ஆமாம்.. ஆமாம்!
இப்போ சொல்லு, அறநிலையத் துறை இந்துக்களுக்கு நன்மை செய்ஞ்சிருக்கா? இல்லையா?
மு.ச:- நன்மை செய்ஞ்சிருக்க மாதிரி தான் தெரியுது!
கோயில்களை மீட்போம்னு பாஜகவும், ஜக்கி வாசுதேவ் மாதிரி திருட்டு சாமியார்களும் கதறுவது எதுக்குன்னு புரியுதா?
மு.ச:- புரியுறா மாதிரித் தான் தெரியுது!
என்ன புரியுது?
தெளிவடைஞ்ச முன்னாள் சங்கி:- எந்த சாதி மக்களை எல்லாம் தீண்டத்தகாதவர்கள், கோயிலுக்குள் வந்தால் கோயில் தீட்டாகிவிடும்னு ஒதுக்கி வைத்திருந்தோமோ, அதே சாதிகளில் இருந்து இடஒதுக்கீட்டின் மூலம் அறநிலையத்துறையில் தேர்வாகிப் பணியாற்றும் அதிகாரிகள் முன், உத்தரவுக்காக உயர்சாதிகளும், மிக மிக உயர்ந்த சாதிகளும் நிற்க வேண்டி இருக்கே என்கிற வயிற்றெரிச்சல் தான்னு புரியுது.
இப்போ சொல்லு, கோயில்களை யாரிடம் இருந்து மீட்க வேண்டும்?
தெளிவடைஞ்ச முன்னாள் சங்கி:- சாதிவெறி பிடிச்சு, ஆகம விதிகள்னு சொல்லிக்கிட்டு, முறையாக வேத சாத்திரங்களைப் படிச்சு தேர்வாகி இருக்கும் அனைத்து சாதிகளில் இருந்தும் அர்ச்சகராகத் தகுதி அடைந்த இந்துக்களை அர்ச்சகர் பணியில் சேர விடாமல் வழக்குப் போட்டு தடுத்து வைத்திருக்கும் அந்த கூட்டத்திடமிருந்தும், ஆகம விதிகளை நாங்கள் மதிக்கிறோம் என்று அனைத்து சாதிகளும் அர்ச்சகர்கள் ஆவதைத் தடுப்போம் என சொல்லாமல் சொல்லும் திருட்டு பாஜகவிடம் இருந்தும் மீட்க வேண்டும்.
போ, போய் அந்த திருட்டு மலைமுழுங்கி கிட்ட சொல்லு.
- Vishnu Murugan.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக