திங்கள், 15 மார்ச், 2021

ராஜஸ்தானில் லஞ்சமாக பாலியல் உறவு? போலீஸ் அதிகாரி கைது

Sexual Favours, Rajasthan, Police Officer, Arrested, Demanding
dinamalar.com ஜெய்பூர் : ராஜஸ்தானில், புகார் கொடுத்த பெண்ணுக்கு ஆதரவாக விசாரணை நடத்த, பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்த போலீஸ் உதவி கமிஷனர், நேற்று கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஒரு பெண் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்கும் சிறப்பு பிரிவின் அதிகாரியாக, போலீஸ் உதவி கமிஷனர் கைலாஷ் போஹ்ரா நியமிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு ஆதரவாக விசாரணை நடத்த, கைலாஷ் லஞ்சம் கேட்டுள்ளார். அதனை கொடுக்க மறுத்த பெண்ணை, பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி வற்புறுத்தி உள்ளார்.
latest tamil news

இதற்காக, அந்த பெண்ணை, தன் வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். இதுகுறித்து, ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ், டி.ஜி.பி.,யிடம், அந்த பெண் புகார் செய்தார்.அவரது பரிந்துரையின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், கைலாஷ் போஹ்ராவை நேற்று கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக