புதன், 10 மார்ச், 2021

பாஜகவினர் ரங்கசாமியை மிரட்டி என். ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி!

May be an image of 3 people and outdoors
Sivakumar Shivas : · புதுச்சேரி மக்களுக்கு துரோகமிழைத்த ரங்கசாமி! ஒரு தெருவில் பத்து ஓட்டு கூட வாங்க வக்கில்லாத பாஜகவினர், ரங்கசாமியை மிரட்டியோ அல்லது ஏதோ ஒரு வழியில் பணியவைத்து வலுக்கட்டாயமாக என். ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளனர். அடிப்படையில், ரங்கசாமிக்கு அரசியல் கொள்கை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. முதலமைச்சர் பதவி ஒன்று மட்டுமே அவருக்கு குறிக்கோள். அவரது அந்த பலவீனத்தை பயன்படுத்தியே அவரை கூட்டணியில் சிக்க வைத்துள்ளனர். ஆனால், வெற்றி பெற்றால் முதல்வர் பதவி நிச்சயம் என்ற தீர்மான ஒப்பந்தம் எதுவும் இல்லை. எல்லாமே பேச்சளவில்தான்.
முன்பு காங்கிரசுக்கு எதிராக, ரங்கசாமியை நம்பி புதுச்சேரி மக்கள் அவருக்கு மகத்தான வெற்றியை தேடி தந்தனர்.
ஆனால் முதல்வர் பதவிக்கு வந்ததும், தன்னை சுற்றி தனக்கு ஜால்ரா போடும் ஒரு கும்பலை வைத்துக்கொண்டு அந்த பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்து வந்தார்.
அடுத்த தேர்தலில், சரியான வேட்பாளர்களை தேர்வு செய்யாமல், கோயில் கோயிலாக சுற்றிக்கொண்டும், சாமியார்கள் மற்றும் சோதிடர்களின் பேச்சை நம்பி கொண்டும், சரியான அரசியல் நிலைப்பாட்டை எடுக்காமல் தேர்தலில் தோல்வியை தழுவினார்.
எதிர்கட்சியாக இருந்த போது கூட மக்கள் பிரச்சனைகளுக்காக எந்த ஒரு போராட்டத்தையும் அவர் செய்ததில்லை.
தான் பதவியில் இல்லாத நிலையில், தன்னை சுற்றி இருக்கும் அரசியல் அரைவேக்காட்டு துதிபாடிகள் தன்னை CM என்று அழைப்பதை ரசித்துகொண்டு, டென்னிஸ் விளையாடுவது, கோயில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் திறப்புவிழா நிகழ்வுகளில் கலந்து கொள்வது, என்று ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருந்தார்.
மத்திய பாஜக அரசு மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வந்த போதும், விலை வாசி உயர்வு சராசரி மக்களை கடுமையாக பாதித்த போதும் அவர் வாயை திறந்ததே கிடையாது.
அதற்கும் மேலாக, மத்திய பாஜக அரசு புதுவை மாநிலத்தை கடுமையாக வஞ்சித்து போது, அதை புதுச்சேரி மக்களின் பிரச்சனையாக பார்க்காமல், காங்கிரஸ் கட்சிக்கு உண்டான நெருக்கடியாக மட்டுமே கருதி, புதுச்சேரி மக்களுக்கு துரோகமிழைத்தார்.
தான் ஆட்சியில் இருந்தபோதும், எதிர்கட்சியாக இருந்த போதும் மாநில அந்தஸ்து குறித்து வாய் திறக்காமல் இருந்தார். இந்த ஆண்டு தேர்தல் அறிவித்தவுடன் "மாநில அந்தஸ்து இல்லையென்றால் தேர்தல் புறக்கணிப்பு" என்று வாய்ச்சவடால் அடித்துவிட்டு, அதன் பிறகு நைசாக நழுவிக்கொண்டார்.
ஒரு பாசிச கருத்தியலை உருவாக்கிவரும் ஆர்எஸ்எஸ் பார்ப்பன பாஜக அரசு, யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து எல்லாம் தரப்போவதில்லை.
மாறாக, மற்ற மாநிலங்களை யூனியன் பிரதேசம் அளவுக்கு தரம் தாழ்த்தி அனைத்து மாநில உரிமைகளையும் பறித்து, ஜம்மு காஷ்மீர் போல மாற்றிவிட திட்டம் தீட்டி வருகிறது.
இப்படிப்பட்ட பாஜக அரசுக்கு ஆதரவாகத்தான் ரங்கசாமி துணை போயிருக்கிறார்.
மாபெரும் வரலாற்று தவறை செய்து விட்டார்!
பாஜக மற்றும் ரங்கசாமி நினைப்பது போல இந்த தேர்தலை அவ்வளவு சுலபமாக சமாளிக்க முடியாது.
பணம் கொடுத்து ஓட்டை வாங்கி விடலாம் என்பதெல்லாம் பகல்கனவு! நீங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு உங்களுக்கு எதிராக வாக்களிக்கவே மக்கள் தயாராக உள்ளனர்.
மக்கள் விரோத பாஜக கூட்டணிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒரு கழுதையை நிறுத்தினால் கூட சராசரி வாக்காளர்கள் அந்த கழுதைக்கே வாக்களிப்பார்கள்.
அப்படியே தேர்தல் கமிஷனை வைத்து, மோசடி செய்து தேர்தலில் வெற்றி பெற்றாலும், இந்த அரசுக்கு எதிராக டில்லி விவசாயிகள் புரட்சியை தொடர்ந்து, வருங்காலத்தில் நடைபெறபோகும் வெகுஜன புரட்சி இந்த பாசிச கோமாளிகளின் அரசை தூக்கி எறியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக