புதன், 3 மார்ச், 2021

தமிழக அரசியலில் இஸ்லாமியர்களின் நிலை

May be an image of text that says '9 தமுமுக 林 SDPÃ MJK'
ஆலஞ்சியார் ; தமிழக அரசியலில் இஸ்லாமியர்களின் நிலை..தேர்தல் வந்தவுடன் வரிந்துகட்டிக்கொண்டு இயக்க முன்னோடிகள் பாடம் நடத்த தொடங்கியிருக்கிறார்கள்..
மூன்று தொகுதிகள்தானா..அடகு வைத்துவிட்டார்கள் இரண்டு தொகுதி என சமரசம் ஆனார் என நிறைய கேள்விகள் ..
தமிழகத்தின் இஸ்லாமியர்கள் 5.8% விழுக்காடு இப்போது அரை விழுக்காடு கூடியிருக்கலாம் ..
அதன்படி 12 முதல்14 வரை இடங்கள் கிடைத்திருக்க வேண்டும் ஏன் கிடைக்கவில்லை என யாரும் யோசித்ததாகவே தெரியவில்லை ..
முதலில் இந்திய துணைக்கண்டத்தில் வேறெங்கும் இல்லாத அளவில் அமைப்புகளின் எண்ணிக்கை நாற்பதை தாண்டுகிறது அதில் நான்கைந்தை தவிர மற்றவை லெட்டர்பேட் "குப்பைகள் ".. நான்கைந்திலும் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையில். சமுதாய நலனை விட தன்நலம் பெரிதென உழைக்கிறார்கள் ..
அவர் இருக்குமிடத்தில் நானில்லை என்பதை தங்கள் "குலவழக்கம் " போல் யாரும் விடுவதாயில்லை ..  உண்மையில் பரிதாபகரமான சமுதாயமாக இஸ்லாமிய சமூகம் இருப்பது வேதனை.யார் இவர்கள் புரிதலற்ற அரசியல் .. தங்களுக்கு நன்றாக பேசவரும் என்பதற்காக மூளைச்சலவை செய்து சமுதாய இளைஞர்களை வழிகெடுத்து தங்களின் புகழ்பாடவைக்கிறார்கள் ..
இப்போதுள்ள தலைவர்களில் பெரும்பாலானோர் புகழ் வேண்டும் அதிகாரம் செலுத்தமிடத்தில் வேண்டும் தனியாக தான் தெரியவேண்டும் கூடவே தியாகசெம்மல்களின் கருணை வேண்டும்,. யார் ஆட்சிக்கு வந்தால் என்ன நாம் இரண்டு போராட்டத்தை அறிவித்தால் போதும் சமுதாயம் நம்பிவிடுமென்று நினைக்கிறார்கள் ..
இஸ்லாமியர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானாலும் சரி.. முஸ்லிம்களை வேட்டையாட தனியாக சட்டமியற்ற ஆதரித்தவன் ஆனாலும் பரவாயில்லை கைநிறைய பணமும் ஒரு சீட்டும் கிடைத்தால் போதும் சட்டமன்றத்தில் தொங்கோட்டம் ஓடலாம் என சில விஷமிகள் காத்திருக்கிறார்கள் ..
சிலர் திமுக எதிர்ப்பு என்ற அருத பழசை கையில் தூக்கி நக்கி பிழைக்க தியாக தலைவியின் காலடியில் காத்திருக்கிறார்கள் பணம் போதும் .. சிலர் வீராப்பு பேசி கடைசியில் ஜனாப் நம்மை காப்பாரென நம்பி தொலைந்து போகிறார்கள் ....
இன்றைய தேவை என்ன..? யார் வரகூடாது குறிப்பாக அதிமுக எனும் நம்பகதன்மை இல்லாத கட்சி பாசிச பாஜகவிற்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்துவிட்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே வடவருக்கு விற்க தயங்காமல் அமித்சாவின் கிளிப்பிள்ளையாய் நிற்கும் பன்னீர் பழநி வகையறாவை விரட்டவேண்டும் என தமிழகமே காத்துநிற்கும் வேளையில் சிறியளவேணும் உதவ மனமில்லையெனினும் கெடுதல் செய்யாமல் இருந்தால் போதும். சமுதாய மேம்பாடு தானாக நடக்கும்.. இஸ்லாமிய இடஒதுக்கீடு தந்தவர்கள் குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோமென உறுதியளிப்போரை நாம் உயர்த்திபிடிக்கவேண்டும் .. அதற்கு இஸ்லாமிய இளைஞர்கள் அரசியலை கற்க வேண்டும் .. மத அரசியலை விடுத்து பொது அரசியலை முன்னெடுக்க வேண்டும் ..திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பை தரும் அவர்களை வெற்றியடைய செய்ய ஒருங்கிணைந்து பாடுபடுங்கள் .. திமுகவிடம் உரிமையோடு வாதிடமுடியும் உங்கள் குரல் கவனிக்கபடும் ..
..
இயக்கங்களின் (இயக்கம் என்பது கூட தவறு அமைப்புகள்) தனிநபர் புகழ் வெளிச்சம் பணம் பதவி விடுத்து ஒற்றுமையாய் IUML முஸ்லிம் லீக்கில் சேர்ந்து பயணிக்கலாம் .. கொள்கை கோட்பாடு மதவிடயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு சமுதாய மக்களின் உயர்வுக்காகவேனும் ஒற்றுமையோடு வாருங்கள் .. நீங்கள் மதவிடயத்தில் "ஞானபண்டிதனாக" கூட இருக்கலாம் அதெல்லாம் வணக்க வழிபாடுகளோடு உங்கள் வாழ்வியலோடு வைத்துக்கொள்ளுங்கள் .. இன்றைய இந்தியாவில் நிலையை உணருங்கள் தமிழகத்தில் கேடுகெட்டவர்களின் ஆட்சியை பாஜகவின் தலையாட்டிகளை வீட்டுக்கு அனுப்ப உணர்ந்து செயல்படுங்கள் ..
இனியேனும் அரசியல் பழகுங்கள் ..
உங்கள் பகை, பதவிமோகம்,புகழ் குழிபறித்தல் தனிநபர் வெறுப்பு , இவையனைத்தும் தூரயெறிந்துவிட்டு சமகால நிலைமையை உணரந்து செயல்படுங்கள்..
இல்லையெனில் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக