ஞாயிறு, 14 மார்ச், 2021

அ.ம.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம்!

ammk and dmdk alliance tn assembly election

nakkheerannewseditor - நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல்- 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது. 

இந்த நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறிய தே.மு.தி.க., அ.ம.மு.க. கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.                       இதனிடையே, அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் 190- க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.                         மேலும், அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம்., எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிய நிலையில், அந்த கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தனர்.

 இதனால் தே.மு.தி.க., அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றும், தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அ.ம.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. டிடிவி.தினகரன் கையெழுத்துடன் ஒப்பந்தக் கடிதத்தை பெற்று கொண்டார் தே.மு.தி.க.வின் அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன். இதில் தே.மு.தி.க.விற்கு 60 தொகுதிகள் ஒதுக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&,,,">அ.ம.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி அறிவிப்பு இன்று (14/03/2021) மாலை 06.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளதாகவும், அத்துடன் தே.மு.தி.க.வின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன.  

 அ.ம.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால், அ.ம.மு.க. சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் திரும்பப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக