திங்கள், 22 மார்ச், 2021

நீட் என்பது அயோக்கியத்தனம் நீட் கொண்டு வருபவர்கள் அயோக்கியர்கள்!

May be an image of 2 people
அவளதிகாரம்  : Never Forget.
Don't let them come again. Not even a single MLA
நீட் வேண்டுமா வேண்டாமா?
அது சமூக நீதி இருக்கிறதா இல்லையா மத்திய அரசு தமிழ்நாட்டை பிடிக்கிறதா இல்லையா ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு நீட் வந்த பிறகு படிப்பில் முன்னேற முடியுமா டாக்டர் ஆக முடியுமா இது எல்லாம் இரண்டாம்பட்சம்தான்...
நீட் என்பது அயோக்கியத்தனம் நீட் கொண்டு வருபவர்கள் அயோக்கியர்கள் நமது மாணவர்களின் கல்வியை தடுத்து நிறுத்தி அதை வேறொரு குரூப்பிற்கு மடைமாற்றம் செய்யும் உத்தி தான் நீட் என்னும் அயோக்கியத்தனம்.
May be an image of 3 people and people standing

எத்தனையோ மாநிலங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது நிறைய மாநிலங்களில் பிட் அடிப்பதற்கு கூட ஏற்பாடு செய்யப்பட்டது
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் எழுதச் சென்ற மாணவர்களின் சட்டைகள் கிழிக்கப்பட்டு தலைமுடி வெட்டப்பட்டு மேலும் சொல்ல வேண்டுமென்றால் மாணவிகளின் உள்ளாடைகள் முதற்கொண்டு அவிழ்த்து பார்த்து பிறகுதான் அனுமதிக்கப்பட்டார்கள்.  அது மட்டும் இல்லை... அந்த அயோக்கிய நாய்களுக்கும் தெரியும் மூக்குத்தியில் காதில் அணிந்திருக்கும் தொட்டில் வளையல்களில் காது ஓட்டைகளில் பிட் வைக்க முடியாது என்று இருந்தாலும் காது ஓட்டைகளிலும் மூக்கு ஓட்டைகளிலும் டார்ச் லைட் அடித்து கூட சோதித்து பார்த்தார்கள் தலைமுடியை வெட்டினார்கள்.
இந்த சோதனைக்கான முழு முயற்சியும் நோக்கமும் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதுதான் நம் மாணவர்களின் மனநிலையை சிதைத்து அவர்களின் தன்னம்பிக்கை உடைத்து மீண்டும் நீட் பக்கமே வரக்கூடாது.
நீட் என்பது டாக்டர் என்பது நமக்கான கல்வி இல்லை என்ற மனநிலையை நமது மாணவர்களின் நமது பெற்றோர்களின் மனதில் ஆழமாக பதிய செய்ய வேண்டும் என்பதுதான்..
இந்த அயோக்கியத்தனத்தை செய்ய பாஜக அரசையோ அல்லது அனைத்தையும் வாய்மூடி அமைதியாக அனுமதித்த அயோக்கிய அதிமுக அரசு இப்போது நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்..
இந்த அயோக்கியர்கள் மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் அவ்வளவு தான் நாம் அனைவரும் கொத்தடிமையாக செல்ல வேண்டியதுதான். தமிழ் மக்களின் ஒரே சொத்து கல்வி தான் தன்னம்பிக்கை தான் அதையும் கொன்று விடுவார்கள்..
நீட் ஒழிக
பாஜக ஒழிக
அதிமுக ஒழிக
தமிழ் வாழ்க
திமுக கூட்டணி வெல்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக