செவ்வாய், 16 மார்ச், 2021

விஜயதரணி : காங்கிரஸை விட்டு விலகப் போவதாக வரும் தகவல் வதந்தி ! ... விஜயதாரணி விவகாரம் சமூகவலை லீக்ஸ்

maalaimalar : விளவங்கோடு தொகுதியை எனக்குக் கொடுக்கக் கூடாது என்று 10 பேர் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். ஆனால், அத்தொகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். அவா்களின் கருத்து என்ன என்பதுதானே முக்கியம். இதை தலைமை அறியாமலா இருக்கும். எனக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் தலைமை தரும். காங்கிரஸை விட்டு விலகப் போவதாக வரும் தகவல் வதந்திதான் என்றாா்.
May be an image of 1 person and standing

Raj Dev  : காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணியை நிராகரிக்க வேண்டிய காரணங்கள் பல உள்ளன தான். அவற்றில் முதன்மையானவை பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் சேர அவர் முயற்சிகள் மேற்கொண்டார் என்பது.
தமிழிசை சவுந்தரராஜனுடன் முன்பு டி.விக்களில் விவாதிக்க நேர்ந்த காலத்தில் தீவிர பாஜக எதிர்ப்பாளராக அறியப்பட்டவர்,
பின்னர் பாஜகவுடன் அனுசரணை கூடி அதற்கேற்ப தனது சத்தத்தை குறைத்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பணியாற்றாமல் ஒதுங்கி இருந்தார். காங்கிரஸ் கட்சியிலிருக்கும் அவரது ஆதரவாளர் ஒருவரிடம் பேசிய போது ஒரு திட்டத்தில் கூட ஐந்து பைசா அவர் கமிசன் பெற்றாரென்று சொல்ல முடியாது என்கிறார்.


ஆற்றுக்கு அந்த கரையில் பல திட்டங்களை கொண்டு வந்தார் என்றும் இந்த கரை மக்களுக்கு அவரை பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை என்றும் கூறினார்.
கடும் எதிர்ப்பை தொகுதியில் அவர் சம்பாதித்துள்ளார் என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் தான் அது. காங்கிரஸ் மேலிடம் விஜய தரணிக்கு சீட் கொடுக்கவே முன்வந்துள்ளது.

பாஜகவில் அவர் சேர முயற்சி கொண்டதை மேலிடம் பொருட்படுத்தவில்லை என்பது இந்த பிரச்சினையின் அவலச்சுவை.
தொண்டர்களிடம் காணப்படும் எதிர்ப்பு மற்றும் மாநிலத் தலைமை விரும்பாதது ஆகியவையே இப்போதைய தாமதத்துக்கு காரணமாக  உள்ளது.
அதே நேரம் விஜயதரணி எதிர்ப்பை சாதிய அணிதிரட்டலாகவும், சாதி அதிகாரத்துவம் ஒன்றை கட்டமைப்பதாகவும் நஞ்சு கலக்கும் கும்பல் எந்த தரப்பின் பிரதிநிதித்துவம்?

Jaroon Sylus  : இந்த யக்கா  எங்க ஊரு விளவங்கோடு காங். கட்சி எம்.எல் ஏ ... இரண்டு முறை ஜெயிச்சிருக்காங்க. இந்த நிமிடம் வரை தொகுதியில் எத்தனை பூத் இருக்கு, வார்டு இருக்கு எத்தனை தொகுதி குறித்த எந்த புள்ளி விபரம் தெரியாது. இந்த யக்கா சார்ந்த சாதி மக்கள் மொத்தம் 10 பேர் கூட தொகுதியில்  கிடையாது.. நாகர்கோவில் பிறந்தவர் என்கிற அடையாளம் மட்டுமே உண்டு. கூடவே எங்க பக்கத்து ஏரியாக்காரரை  கல்யாணம் செய்திருக்கிறார் , இது மட்டும் தொகுதியின் முகவரி.
எங்க தாதா  முன்பு அடிக்கடி சொல்வார்.. நம்ம தொகுதியில் "கை" சின்னத்தில் ஒரு ******* (beep)  நிப்பட்டினாலும் அது  ஜெயிக்கும்டானு " . தாதா சொன்னது வாஸ்தவம் தான். கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலே அதற்கு சாட்சி..
தொகுதியில் பெரும்பான்மை மக்கள்  இந்து சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரும் இந்துத்வர்களாக இருப்பதில்லை. அது தான் காங். கட்சியின் பலம். 1985 க்கு முன்பு வரை கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்ததை தகர்த்து எறிந்து காங். கோட்டையாக மாற்றி அமைத்தது சுந்தரதாஸ் போன்ற ஜாம்பவான்கள். பிற்காலத்தில் இந்துத்வத்தை வேரறுக்க கம்யூனிஸ்ட்கள்,  காங். கை கோர்த்த நிகழ்வுகளும் உண்டு.
எனது இரத்த உறவுகள், உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என  காங். கட்சிக்காக உழைத்து, உழைத்து வாழ்க்கையை இழந்து தெருவில் நிற்பவர்கள் / நின்றவர்கள் ஆயிரமாயிரம் உண்டு. எந்த பிரதிபலனும் எதிர்பாராது, இந்துத்வத்தை வளர விடாமல், அதே வேளை ஆண்ட கட்சிகளான அதிமுக, திமுக வை காலூன்ற விடாது, ஒரே நேரத்தில் இவர்களை எதிர்கொண்டு பாரம்பரிய காங்கிரஸ் (விதை நெல்லை) கட்சியை பாதுகாத்து வருபவர்கள் இங்கு ஆயிரமாயிரம் பேர் உண்டு.
இத்தகைய மண்ணில் தான் .. தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஒரு டெல்லி லாபிஸ்டை காங். கிழடுகள் எங்கள் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். கட்சி யாரை நிறுத்தினாலும் ஜெயிக்க வைக்க இங்கு ஏமாளிகள் ஏராளம் உண்டு என்பது டெல்லி பொலிட்பிரோவுக்கும்,  சத்தியமூர்த்தி பவன் கூர்க்காக்களுக்கும் தெரியும்... அதன் வெளிப்பாடே 2011, 2016- இல் அமோக வெற்றி .
நோகமா நுங்கு தின்றவர்களுக்கு கட்சி, கொள்கை, பற்று, தொண்டன் எல்லாம் இங்கு மசிரு மாதிரி.. அது தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.. தற்போது தனக்கு சீட் கிடைக்காத பட்சத்தில் பாஜக விலும்  துண்டு போட்டு வைத்திருப்பது தான் அல்டிமேட் . இந்த முறை கேரளாவை பூர்வமாக கொண்ட ஒரு மலையாளத் தமிழனும் காங். கட்சி ரேஸ்ஸில் இருப்பது தான் ஆகச் சிறந்த கொடுமை. உள்ளூர்க்காரன் ஒருத்தனும் லாயக்கு இல்லையென டெல்லி காங். முடிவு செய்திருக்கிறது போல.. இன்னும் சில நாட்களில் ஏதேனும் ஒரு வெளியூர் இறக்குமதியை நிறுத்துவார்கள் பாருங்கள்.. எங்கள் ஊர்க்காரங்க கூச்சமே இல்லாம 30,00 ஓட்டு வித்தியாசத்தில ஜெயிக்க வைப்பாங்க... அது தான் எங்க ஊரு கிழட்டு வறட்டு கெளரவம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக