நஸ்ரியா கணவர் பகத் பாசில்..தீவிர சிகிச்சை பிரிவில்
Tamil Cinema News - ஹரிஷ் கல்யாண்
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகையான நஸ்ரியா கணவர் பகத் பாசில் திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மலையாளத்தில் மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். தமிழிலும் பேமஸ் ஆன நடிகர் தான். ஹீரோயிசம் காட்டாமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அசால்டாக நடிப்பவர்.
நடிக்கத் தெரிந்த சில நடிகர்களில் பகத் பாசில் கண்டிப்பாக ஒரு முக்கிய இடம் பிடித்திருப்பார். தற்போது அவர் மலையாளத்தில் மலையன் குஞ்சு எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை சஜிமோகன் என்ற இளம் இயக்குனர் இயக்கி வருகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக