செவ்வாய், 2 மார்ச், 2021

வன்னியர்களுக்கு ஏற்கனவே கிடைத்துக் கொண்டிருக்கும் இடங்கள் குறையும்.. வன்னியர் உள் ஒதுக்கீட்டால்?

May be an image of 1 person and text
Prakash JP : வன்னியர் உள் ஒதுக்கீட்டால் ஏற்கனவே வன்னியர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் இடங்கள் குறையும் ஆபத்து...நேரடியான சாதிவாரியாக அரசு வேலைகளில் சேருபவர்களின் புள்ளிவிவரங்கள் அதிகாரபூர்வமாக கிடைக்காதபட்சத்தில், இதோ சைதை துரைசாமி அவர்களால் நடத்தப்படும் மனிதநேய பயிற்சி மைய புள்ளிவிபரங்கள் ஓரளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை... தமிழ்நாட்டில் அரசு வேலைகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களில் இந்த மனிதநேய பயிற்சி மையத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு.. காரணம், இங்கே பயிற்சி பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் அரசு வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள்... இப்படிப்பட்ட இந்த பயிற்சி மையம் இப்போது தங்கள் பயிற்சி மையத்தின் மூலம் அரசுப் பதவிகளில் சேர்ந்தவர்களின் சாதிவாரியான எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது...
அதன்படி பார்த்தால் ஏறக்குறைய மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 741 (541+மறவர் பிரமலை கள்ளர் 200) இந்த மையத்தின் மூலம் அரசு பதவியில் சேர்ந்திருக்கிறார்கள்.. இந்த 741 எம்பிசி இடங்களில் வன்னியர்கள் 447.. அதாவது 60.3% இடங்கள்.. இதை அப்படியே எம்பிசி ஒதுக்கிடான 20% ஒப்பிட்டால், 12% சதவீதமாக வருகிறது... அதாவது இப்போது ராமதாஸும் அதிமுக அரசும் கொடுத்துள்ள 10.5% தனி வன்னியர் உள் ஒதுக்கீட்டை விட அதிகம்..
எனவே இப்போது கொடுக்கப்பட்டுள்ள வன்னியர் 10.5% தனி உள் ஒதுக்கீட்டை விட தற்போது இருக்கும் 20% சதவீத எம்பிசி ஒதுக்கீட்டில்லேயே வன்னியர்கள் அதிகப்படியாகவே அரசு வேலைகளில் சேருகிறார்கள்...
 இப்போது அதிமுக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தனி உள் ஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கு ஏற்கனவே கிடைத்துக் கொண்டு இருக்கின்ற இடங்கள் குறையும்...
அதேபோல, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்படும் பணிகளில் வன்னியர்கள் அதிகமாக இருக்கும் வடமாவட்டங்களில் இப்போது ஏறக்குறைய 90 சதவிகித எம்பிசி இடங்கள் வன்னியர்களுக்கு தான் கிடைக்கிறது, காரணம் இந்த மாவட்டங்களில் மற்ற MBC பிரிவினர் அதிகம் கிடையாது.. இதுவும் இப்போது இந்த தனி உள் ஒதுக்கீட்டால் 50 சதவிகிதத்திற்கு குறையும் ஆபத்து வந்துவிட்டது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக