ஞாயிறு, 7 மார்ச், 2021

கிருஷ்ணகிரி சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

dailythanthi.com கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடு அருகே உள்ள சமத்துவபுரத்தில் பெரியாரின் வெண்கல சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியாரின் வெண்கல சிலைக்கு டயர் அணிவித்து தீ வைத்து அவமதிப்பு செய்த நபர்களை கைது செய்யக்கோரி அப்பகுதியில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக