Ezhumalai Venkatesan : தேர்தல் முடிவதற்குள் இன்னும் எவ்வளவு எழவுகளை பார்க்க வேண்டுமோ?
மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கிய சகாயம் என்பவரின் குடும்பம் சென்னைக்கு சென்று திருமண விழாவில் கலந்துகொண்டு விட்டு காரில் திரும்பும்போது சீர்காழி அருகே தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் மடக்கு கின்றனர்..
அணிந்துவிட்டு பின்னர் பாதுகாப்புக்காக 30 சவரன் நகைகளை கழட்டி ஒரு பெட்டியில் வைத்துக்கொண்டு வைத்துள்ளது அந்த குடும்பம்.
நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று சொல்லி பறிமுதல் செய்து அதை வட்டாட்சியரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டனர் அதிகாரிகள்..
புதியதலைமுறை டீவி டுவிட்டரில் இந்த செய்தியை படித்த போது தேர்தல் ஆணைய பறக்கும் படையின் கடமை உணர்வால் தலை கிறுகிறுத்தது..
எப்பவோ வாங்கிய நகைகளுக்கு இப்பவும் ஆவணங்களோடு அலைய முடியுமா?
பறக்கும் படையினரிடமே, "நீங்களெல்லாம் யார் யார்? மரியாதையா உங்களுடைய ஆரம்பகால கவர்மெண்ட் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர காட்டுங்க"ன்னு கேட்டால் என்னவாகும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக