புதன், 3 மார்ச், 2021

ஆயிஷா ஆரிப் ராஜஸ்தான்! சீதன கொடுமையால் சபர்மதி நதியில் குதித்து தற்கொலை.. முன்பாக வெளியிட்ட வீடியோ Ayesha Khan Suicide Video Before Jumping Into Sabarmati River

.  அஹமதாபாத்தில் வரதட்சணை கொடுமையால் சபர்மதி நதியில் குதித்து தன்னுயிரை மாய்த்த 23 வயது ஆயிஷா தற்கொலை முடிவுக்கு நிமிடங்கள் முன்பு சிரித்தபடியே வீடியோவும் எடுத்து அனுப்பியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. 

 2018 ல் ராஜஸ்தான் ஜலூர் பகுதியைச் சேர்ந்த ஆரிப் கானுடன் நடந்த திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து வரதட்சனை கேட்டு ஆரிப்கான் குடும்பத்தினர் மகளை துன்புறுத்தியதாக கூறுகிறார் கூலி வேலை செய்யும்

ஆயிஷா தந்தை லியாக்கத் அலி.    மகளின் வாழ்க்கை கருதி கேட்கும் போதெல்லாம் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தபோதும் சில மாதங்களுக்கு முன் ஆயிஷாவை ஆரிப் கான் துன்புறுத்தி திரும்ப அனுப்பியதாக கண் கலங்குகிறார் லியாக்கத் அலி...
தனது மரணத்திற்கு முந்தைய நிமிடத்தில் நதியில் குதிப்பதற்கு முன் பகிர்ந்த வீடியோவில்...
"நான் ஆரிபுக்கு தேவையான சுதந்திரத்தை வழங்குகிறேன்.
எனது இந்த முடிவுக்கு நானே காரணம்.
நான் இறைவனிடம் செல்கிறேன்
நான் செய்த தவறு என்ன என்று இறைவனிடமே கேட்க போகிறேன்?
நான் ஒரு விஷயம் உணர்ந்துள்ளேன்
மண வாழ்க்கை சிறக்க அன்பு செலுத்த வேண்டும் என்றால் இருவரும் பரஸ்பரம் அன்பு செலுத்துங்கள்..
யாராவது ஒருவர் மட்டும் அன்பு செலுத்தும் வாழ்வில் புரிதல் இருக்காது.
நான் சொர்க்கத்துக்கா, நரகத்துக்கு செல்கிறேனா என்பது கூட எனக்கு தெரியாது..
ஆனாலும் இந்த நிமிடம் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்."
என்று வீடியோவில் பேசிய ஆயிஷா உயிரை மாய்த்துள்ளார்.. சமூகவலை பதிவு  share copy past

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக