வியாழன், 11 மார்ச், 2021

ரூ70 லட்சம் சீட்டு மோசடி-பாஜக தேர்தல் பொறுப்பாளர் 'கந்துவட்டி' சீனிவாசனை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்

சீட்டு மோசடியில் ஈடுபட்ட பாஜக தேர்தல் பொறுப்பாளர் மனைவியுடன் கைது; சிறையில்  அடைப்பு

Mathivanan Maran - /tamil.oneindia.com :  சென்னை: சென்னையில் நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் ரூ70 லட்சம் மோசடி செய்ததாக பாஜகவின் வடசென்னை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் சீனிவாசன், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை செம்பியம் பகுதியில் சுவர்ணலட்சுமி நிதி நிறுவனம் நடத்தி வந்தார் சீனிவாசன். மேலும் கந்துவட்டி தொழிலும் செய்து வந்தார்.
வட்டி தராதவர்கள், பணத்தை திருப்பி கொடுக்காதவர்களை அடியாட்கள் மூலம் மிரட்டி வந்தாராம் சீனிவாசன். இந்த நிலையில் சீட்டு பிடிப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்திருக்கிறார் சீனிவாசன்.


ஆனால் அப்படி வசூல் செய்த பணத்தை சீனிவாசன் திருப்பி தராமல் ரூ70 லட்சம் மோசடி செய்திருக்கிறார் என்பது புகார். இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் இன்று சீனிவாசனையும் அவரது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக