புதன், 17 மார்ச், 2021

தமிழகத்தின் 69 வீத இட ஒதுக்கீட்டுக்கு வேட்டு வைக்க உச்சநீதிமன்றம் முயல்கிறது ஊடகங்கள் இதுபற்றி பேச மறுப்பதேன்?

உச்ச நீதிமன்றம் மராத்தா மாநில மக்களுக்க்காக இயற்றிய சட்டத்தை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது பின்தங்கிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்படி நீங்களே தீர்மானித்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது 

அதை நாடாளுமன்றம்தானே செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளது. இது எவ்வளவு ஆபத்தான விடயம்? அந்த மாநில மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சமூக அளவிலும் மிகவும் பின்தங்கி இருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை தருகின்ற சமூக நீதிக்கான வாய்ப்பை வழங்குகின்ற உரிமை அந்த மாநில அரசுக்கு கிடையாது! 

இது ஏதோ வெறும் மகாராஷ்டிரா மாநிலத்துக்கான கேள்வி மட்டுமல்ல எல்லா மாநிலங்களுக்கும் இது பொருந்தும். இது மிக ஆபத்தான விடயம் இதை இப்படியே விட்டுவிட்டால் நாம் இதுவரை போராடி பெற்ற எல்லாவற்றையும் இழந்து விடுவோம்.

 இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாமல் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டை இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வழக்கில் 50 வீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு போகவில்லையா? அப்படி என்றால் தமிழ்நாட்டில் 69 வீதம் இருக்கிறதே?       அதை நிறுத்தவேண்டுமே? தமிழ்நாட்டு அரசு வழக்கறிஞர் என்ன சொல்கிறார் என்று ஒவ்வொரு முறையும் கேட்கிறது உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் ஒவ்வொரு முறையும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் தமிழ்நாட்டு 69 வீத இட ஒதுக்கீடு என்பது பாதுகாக்கப்பட்டு அட்டவணைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது. 

தோழர் ஜீவா சகாப்தம் இந்த விடயத்தை பற்றி பேசி உள்ளார்கள் ஏனைய ஊடகங்கள் கள்ள மௌனம் காக்கின்றன இந்த காணொளியில் இது பற்றி மேலும் பல விபரங்களோடு விரிவாக பேசி உள்ளார் .பாருங்கள்

 tamil.news18.com :தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இட ஒதுக்கீடு எதிராக மாணவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதி கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது.
இட ஒதுக்கீடு என்பது 50% தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால் தமிழகத்தில் 69% கடை பிடிக்கப்பட்டு வருகிறது,
இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
எனவே இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் அதுவரை 69% இடஒதுக்கீடு வழங்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, "69% இட ஒதுக்கீடு விவகாரம் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று, அரசியல் சாசன பிரிவு 9ன் கீழ் சட்ட பாதுகாப்பு பெற்றுள்ளது.
மராட்டிய இட ஒதுக்கீடு வழக்கில் 50% கொடுக்க வேண்டும் என கோரவில்லை, உரியவர்களுக்கு பிரிவுகள் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே ஆகும்.
எனவே தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு வழக்கு தனித்துவமானது, அதை பிற வழக்குடன் சேர்த்து விசாரிக்கக்கூடாது என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் 17 - ம் தேதிக்கு ஒத்திவைத்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக