புதன், 3 மார்ச், 2021

காங். பிடிவாதமாக கேட்டது 41 தொகுதிகள்... 24-ல் நிற்கும் திமுக.. 25 கிடைக்கலாம்.. இதுதான் நிலவரம்!

  Mathivanan Maran  - tamil.oneindia.com  : சென்னை: 41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 25 தொகுதிகள் ஒதுக்கும் நிலையில்தான் இருக்கிறதாம் திமுக. சட்டசபை தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸ் தற்போதுவரை இடம்பெற்றுள்ளது.
திமுக இந்த முறை அதிக இடங்களில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது.
சிபிஎம் கேட்டது 11 தொகுதிகள்... அதிகபட்சம் 5 தான்.. திமுக கறார் காட்டியதால் படு அப்செட்!
லோக்சபா தேர்தலைப் போல கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான இடங்களை வழங்க மறுக்கிறது. கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் இடங்களுக்கு நேர் எதிராக சொற்ப தொகுதிகளைத்தான் கொடுப்போம் என்பதில் பிடிவாதமாகவே இருக்கிறது திமுக.
இது திமுக கூட்டணியில் வெளியில் சொல்ல முடியாத பெரும் மனக்கசப்பை வெளிப்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் மிகப் பெரும் மனக்குமுறலில்தான் இருக்கின்றன.
ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் ஆகக் கூடுமானவரை திமுகவுடன் போராடி தொகுதிகளை பெறலாம் என நினைக்கின்றன அந்த கட்சிகள்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 41 தொகுதிகளை எதிர்பார்த்தது. திமுகவோ பங்கு சந்தை கணக்காக தொகுதிகள் எண்ணிக்கைகளில் ஏற்ற இறக்கங்களை காட்டியது.
ஒருகட்டத்தில் 18 தொகுதிகள் என்றெல்லாம் பேசப் போய் கடுப்பாகிப் போகினர் காங்கிரஸ் தலைவர்கள். 24 தொகுதிகளில் நிற்கும் திமுக 24 தொகுதிகளில் நிற்கும் திமுக 18-ல் தொடங்கிய பேரம் 20, 22 என நகர்ந்தது.
சென்னையில் நேற்று இரவு கே.எஸ். அழகிரி தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்திய போது 24 தொகுதிகள்தான் என உறுதியாக சொன்னது திமுக.
கூட்டணியைவிட்டு காங்கிரஸ் போகாது என்கிற நினைப்பில் திமுக இப்படி சொன்னதா? அல்லது போனால் போகட்டுமே என இப்படி ஒரு நிலைப்பாட்டில் திமுக இருக்கிறதா? என்பது தெரியவில்லை.
திமுக அணியில் கடைசியாக காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். இதற்கு மேல் வாய்ப்பு இல்லை. இந்த 25 தொகுதிகளை மனப்புழுக்கத்துடன் ஏற்கிறோம் என சொல்லப் போகிறதா காங்கிரஸ்?
அல்லது நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்காத நிலையில் கூட்டணிக்கு குட்பை சொல்கிறோம் என்று அறிவிக்கப் போகிறதா காங்கிரஸ்? என்பதுதான் இப்போதைய நிலை.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tn-assembly-election-dmk-s-final-offer-24-or-25-seats-only-to-congress-413591.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக