புதன், 10 மார்ச், 2021

அதிமுக வேட்பாளர் பட்டியல்: 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பில்லை! 2 எம்பிக்களுக்கு வாய்ப்பு

அதிமுக வேட்பாளர் பட்டியல்:  3 அமைச்சர்களுக்கு வாய்ப்பில்லை! 2 எம்பிக்களுக்கு வாய்ப்பு
minnambalam :அதிமுகவின் 171 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மார்ச் 10 வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழக அமைச்சர்களில் கிட்டத்தட்ட பெரும்பான்மையோர் தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டும் தற்போதைய சிவகாசி தொகுதியிலிருந்து ராஜபாளையம் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் 3 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் வளர்மதி, வாணியம்பாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் நிலோபர் கபில், சிவகங்கைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பாஸ்கரன் ஆகியோருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் கேபி முனுசாமி வைத்தியலிங்கம் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். கேபி முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியும் வைத்தியலிங்கத்துக்கு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேந்தன் minnambalam.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக