வியாழன், 4 மார்ச், 2021

கொங்கு ஈஸ்வரனுக்கு 2 சீட்!

கொங்கு ஈஸ்வரனுக்கு 2 சீட்!

 minnambalam :கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருக்கிறது.     2019 நாடாளுமன்றத் தேர்தலில், நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.கே.பி. சின்ராஜ், 6 லட்சத்து 26 ஆயிரத்து 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.   தற்போது 2021 சட்டமன்ற தேர்தலுக்காகக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், இன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் திமுக இடையே பேச்சிவார்த்தை நடந்தது.   இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 6 தொகுதிகள் கேட்ட நிலையில், திமுக 2 இடங்களை ஒதுக்கியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக