வெள்ளி, 19 மார்ச், 2021

திமுக கூட்டணி 200 இடங்களுக்கு குறையாமல் வெல்லும்! ...உழைத்தால் 234 தொகுதிகளையும் வெல்லலாம்! .. .கார்த்திகேயன் பஸ்துரா

May be an image of 1 person and smiling

Karthikeyan Fastura : : போன சட்டமன்ற தேர்தலில் கிடைத்த அதே வாக்குசதவிதம் திமுகவிற்கு கிடைத்தால் கூட இம்முறை திமுக கூட்டணி 200 இடங்களுக்கு குறையாமல் வெல்லும் என்று நம்புகின்றேன். சின்சியராக உழைத்தால் 234 தொகுதிகளையும் வெல்லலாம். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு Paradox of Choices எதிர்தரப்பில் அமைந்திருக்கிறது. 

அதிமுக கூட்டணி
ம்முக கூட்டணி
மக்கள் நீதி மைய கூட்டணி
நாதக   
திமுககூட்டணிக்கு எதிர்தரப்பு எண்ணம் கொண்ட கொஞ்ச நஞ்ச மக்களின் வாக்குக்களை கூட அழகாக சிதறடித்துவிடுவார்கள்.    திமுக கூட்டணி முழுவெற்றி அடையும்போது பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் இடத்தை பெற்று காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறலாம். ஆனால் அந்த கட்சியில் பேச்சாளுமை கொண்ட தலைவர் இல்லை. ஆகவே காங்கிரஸ் ஆதரவுடன் கம்யுனிஸ்ட்கட்சி, விசிக, மதிமுக கட்சி உள்ளிட்ட கூட்டணிகட்சிகளில் சிறந்த தலைவரை நியமிக்கலாம்.
இன்றைய தமிழகத்திற்கு தேவை இது தான். மத்தியில் அசுரபலத்தோடு அமர்ந்துகொண்டு பாசிச இந்துத்துவ ஆட்சியை நடைமுறைபடுத்தும் பாஜக ஆட்சிக்கு பதிலடி கொடுக்க அதேவிதமாக அசுர பலத்தோடு மாநில சட்டமன்றத்தில் அமர்ந்தால் தான் எதிர்க்க முடியும். மேலும் இது பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் திமுக கூட்டணிக்கு சேர்க்கும். வலுவான எதிர்ப்பு குரலை பதியவைக்கலாம்.
ஆகவே திமுக கூட்டணி கட்சித்தலைவர்கள் எங்கெல்லாம் எதிர்தரப்பு பலமுடன் இருப்பதாக நினைக்கிறார்களோ அங்கே இன்னும் அதிகமாக உழைக்கவேண்டும்.
அதேபோல கூட்டணிக்கட்சிகளில் எவரெல்லாம் வீக்காக இருக்கிறார்களோ அங்கெல்லாம் கூட்டணிகட்சி ஒருங்கினைவோடு பேதமில்லால் கடுமையாக உழைத்து அவர்களுக்கு வெற்றி தேடித் தரவேண்டும்.
இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான சூழல். அதை எதிர்கொள்ளும் நம்பிக்கையை தர மிக பிரம்மாண்டமான வெற்றி அவசியம். அது மிக மிக சாத்தியமும் கூட. 100 சதவீத முழுவெற்றிக்கு திமுக கூட்டணி கடுமையாக உழைத்திட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக