சனி, 20 மார்ச், 2021

மலையகத்தில் பயங்கர பேருந்து விபத்து 14 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம்

மலையகத்தில் பயங்கர பேருந்து விபத்து . 14 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம் லுணுகலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து பஸ்ஸறை பகுதியில் ஒரு அபாய வளைவில் கனரக வாகனத்தோடு மோதியதில் மலை அடிவாரத்திற்கு செங்குத்தாக விழுந்தது அதில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்துள்ளார்கள் மேலும் 20 பேர் படுகாயம் மொனராகலை- பதுளை வீதியின் பஸ்ஸறை 13 ஆம் தூண் பிரதேசத்தில் இன்று காலை 7.15 மணியளவில் இந்த விபத்து சம்பவித்தது குறித்த விபத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பில பஸ்ஸர பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக