வியாழன், 25 பிப்ரவரி, 2021

கலைஞர் ஜெயா மறைவை தொடர்ந்து RSS மீண்டும் சாதீய அரசியலை மூட்டி வைத்துள்ளது.

List of Political Parties-Alliances-CM Candidates- 2016 Tamilnadu Assembly  Elections
Kandasamy Mariyappan : · அதிமுக+பாமக+பாஜக கூட்டணி ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்: பெரியாரின் மிகப்பெரிய முயற்சியால் 60களில் சாதீய அடையாளம் சிறிது சிறிதாக குறைய தொடங்கிய சமயம். 70களில் திமுக சாதீயம் பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தியது.
ஆனால் RSS அடிமை திரு. எம்ஜி. ராமச்சந்திரன் ஷுபயோக ஷுபதினத்தில் ஹோமம் வளர்த்து மும்மூர்த்திகள் ஆதரவோடு முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிய ஷாட்சாத் மாயத் தேவர் மூலம் மீண்டும் ஷாதீய அரசியலை ஆரம்பித்து வைத்தார். குறிப்பாக தெற்கு மண்டலத்தில் முக்கலத்தோர், மேற்கு மண்டலத்தில் கவுண்டர் என்று தீவிர சாதீய அரசியல் தீ மூட்டப்பட்டு விட்டது.
80களில் வடக்கு மண்டலத்தின் நாயகர் மருத்துவ. ராமதாஸ் இடஒதுக்கீடு என்ற போர்வையில் வன்னியர் சாதீய அரசியலை கையிலெடுத்தார். 90களில் நேரடி அரசியல் பிரவேசம் செய்கிறார். வியாபாரம் நன்றாகவே இருந்தது!!!
இதனைப் பார்த்த வெள்ளாளர்(பிள்ளை, முதலி, கார்காத்த, சோழிய, கவுண்ட, துளுவ) இனம் ஒரு முயற்சி எடுக்கிறது! ஆனால், நல்லவேளை தோல்வியில் முடிந்தது. அதன் நீட்சியாக 2010ல் கவுண்டர்(தனிக்கட்சி) அரசியல் தலைதூக்கியது.
இவையெல்லாம் இன்றைய 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு தெரியாது.
இவை எல்லாவற்றிற்கும் 2014, 2016 தேர்தல்களில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
செல்வி ஜெயலலிதா மற்றும் கலைஞர் அவர்களின் மறைவை பயன்படுத்தி RSS மீண்டும் சாதீய அரசியலை மூட்டி வைத்துள்ளது.
ஒருவேளை இந்த சாதீய மதவாத கூட்டணி வெற்றிபெற்றால் அடுத்த 50 ஆண்டுகளில் தமிழகம் சாதீய மதவாத அடிமைத்தனத்தில் மூழ்கி இருக்கும்.
எனவேதான் அதிமுக(முக்கலத்தோர், கவுண்டர்)+பாமக(வன்னியர்)+பாஜக(RSS)+சமக(நாடார்)+புத(பள்ளர்)+புநீக(முதலியார்) கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்.
பெரியாரின் தன்னலமற்ற உழைப்பு வீணாகிவிடாது என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.
வாழ்க தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக