திங்கள், 8 பிப்ரவரி, 2021

ஜாதி உளவியலை பயன்படுத்தி RSS தமிழ் நாட்டை சீரழிக்க வந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!!

Kandasamy Mariyappan : · நேற்று, அரசு ஊழியர்களைப் பற்றிய பதிவு ஒன்றை எழுதுகினேன். பலர் ஆதரித்தனர், சிலர் எதிர்த்தனர்! எதிர்ப்புக்கான காரணம்..... 1970க்கு முன்பு இது போன்ற குற்றச்சாட்டுகள் மக்களிடமோ, ஊழியர்களிடமோ, அதிகாரிகளிடமோ, அரசிடமோ இருந்ததில்லை! பிறகு ஏன் இப்பொழுது..!!!?? அதுதான் நம்மிடம் இருக்கும் உளவியல்!!! ஒரு அருந்ததியர் ஆசிரியராக இருப்பதை, ஒரு புதரை வண்ணாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! ஒரு புதரை வண்ணார் அரசு வக்கீலாக இருப்பதை
ஒரு பறையரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு பறையர் நீதிபதியாக இருப்பதை, ஒரு பள்ளரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
ஒரு பள்ளர் மின் துறை பொறியாளராக இருப்பதை ஒரு அம்பட்டரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
ஒரு அம்பட்டர் வருவாய் துறை அதிகாரியாக இருப்பதை, ஒரு வண்ணாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு வண்ணார் மருத்துவராக இருப்பதை, ஒரு வளையரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு வளையர் பொதுபணித்துறை பொறியாளராக இருப்பதை, ஒரு வன்னியரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு வன்னியர் துணை வேந்தராக இருப்பதை, ஒரு கள்ளரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு கள்ளர் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருப்பதை, ஒரு நாடாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு நாடார் கல்லூரி விரிவுரையாளராக இருப்பதை, ஒரு கோனாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு கோனார் விவசாய அதிகாரியாக இருப்பதை, ஒரு அகமுடையாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு அகமுடையார் தாசில்தாராக இருப்பதை, ஒரு தேவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு தேவர் மாவட்ட ஆட்சியராக இருப்பதை, ஒரு உடையாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு உடையார் தலைமை செயலாளராக இருப்பதை, ஒரு செட்டியாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு செட்டியார் மாவட்ட எஸ்பியாக இருப்பதை ஒரு வேளாளரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
இவர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாகவும், அதிகாரிகளாகவும், அமைச்சர்களாகவும் இருப்பதை பார்ப்பனர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு "இசை வேளாளர்" முதலமைச்சராக இருந்ததை...
ஒட்டுமொத்த தமிழ் சாதி மக்களாலும், ஏற்றுக் கொள்ள முடியவில்லை!!!
அதன் வெளிப்பாடுதான், அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான உளவியல் குற்றச்சாட்டு!
அவர்களின் எந்த நிறைகளையும், நாம் பேசுவதில்லை!
இந்த உளவியலை பயன்படுத்திக் கொண்டுதான், RSS தமிழ் நாட்டை சீரழிக்க வந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!!
ஜாதிப் பெயர்களை பயன்படுத்தியதற்கு மன்னித்து விடுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக