ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

பிரதமரை புகழ்ந்து தள்ளும் காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் .. Modi போல தலைவரை கொண்டிருப்பதில் பெருமை.

tamil.oneindia.com :ஸ்ரீநகர்: பிரதமரைப் போல கிராமங்களிலிருந்து வந்திருக்கும் தலைவர்களைக் கொண்டிருப்பது பெருமை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புகழ்ந்து பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவர்.
அம்மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் மூன்று ஆண்டுகள் முதல்வராகும் இருந்துள்ளார்.
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ராஜ்ய சபாவிலும் உறுப்பினராக இருந்துள்ளார். பாஜக ஆட்சி அமைத்த பின், 2014ஆம் ஆண்டு முதல் ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த குலாம் நபி ஆசாத்தின் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்காலம் கடந்த 15ஆம் தேதியுடன் முடிந்தது.
அப்போது நாடாளுமன்றத்தில் மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசிய பிரதமர் மோடி, உங்களை ஓய்வு பெற விட மாட்டேன் என்றும் உங்களுக்குக் கதவுகள் திறந்தே உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
பிரதமரை நினைத்து பெருமை இந்நிலையில், இன்று காஷ்மீரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய குலாம் நபி ஆசாத், "பல தலைவர்களிடமும் எனக்கு நிறைய விஷயங்கள் பிடிக்கும். நான் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன், அதில் பெருமைப்படுகிறேன். ஒரு காலத்தில் தேநீர் விற்ற நமது பிரதமரைப் போன்ற தலைவர்களும் கிராமங்களிலிருந்து வந்தவர்கள் என்பதில் பெருமைப்படுகிறேன். நாங்கள் எதிர்க் கட்சிகளில் இருக்கலாம், ஆனால் அவர் தனது உண்மையை மறைக்கவில்லை என்பதை நான் பாராட்டுகிறேன்" என்றார்.

கற்பனையில் வாழும் தலைவர்கள் தொடர்ந்து எந்த தலைவர்கள் பெயரையும் குறிப்பிடாமல் பேசிய அவர், "பல தலைவர்கள் இங்குக் கற்பனையாக ஒரு உலகில் வாழ்கின்றனர். ஒரு மனிதர் தான் எங்கிருந்து வந்தேன் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். நான் உலகம் முழுவதும் பயணித்துள்ளேன். நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியுள்ளேன். ஆனால், நான் எனது மக்களுடன் கிராமத்தில் அமரும்போது அது எல்லாவற்றையும்விட சிறப்பானது" என்றார்

 பலவீனமாகிறது முன்னதாக, நேற்று கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், "உண்மை என்னவென்றால், காங்கிரஸ் தொடர்ந்து பலவீனம் அடைந்து வருவதை நாங்கள் காண்கிறோம். அதனால்தான் நாங்கள் இங்குக் கூடியிருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்" என்றார்

அதிருப்தி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் ராகுல் காந்திக்கும் இடையே ஒருவித மோதல் தொடர்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் உள்ள 23 தலைவர்கள் இது குறித்து சோனியா காந்திக்குக் கடிதம்கூட எழுதியிருந்தனர். மேலும், அவர்கள் கட்சியின் தலைமைக்கு எதிராகத் தொடர்ந்து பொதுவெளிகளிலும் கருத்துகளைக் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக