ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

EVM இயந்திரத்தில் .... எப்படி ஹேக் செய்வது?

 Velmurugan Balasubramanian : · EVM இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியாது - அரைவேக்காடுகள்
EVM இயந்திரத்தின் அடிப்படையை பார்ப்போம்.
EVM என்பது ஒரு மின்னணு கருவி. வோட்டு போடும்போது அதில் தகவல் எழுதப்படுகிறது. வோட்டு எண்ணும் போது அதிலிருந்து தகவல் படிக்கப் படுகிறது. அதாவது, தகவலை எழுதவும் படிக்கவும் முடிகின்ற ஒரு இயந்திரம் தான் EVM.தகவலை எழுதும்போது அது என்கிரிப்ட் செய்யப் படுகிறது. தகவலை படிக்கும்போது அது டீகிரிப்ட் செய்யப்படுகிறது. என்கிரிப்ட்/டீகிரிப்ட் செய்ய பல ஆயிரம் பார்முலாக்கள் உள்ளன. ஒவ்வொரு கம்பேனியும் ஏதாவது ஒரு ஃபார்முலாவை பயன்படுத்துவார்கள்.
ஆக, என்கிரிப்ட் மற்றும் டீகிரிப்ட் பார்முலா தெரிந்து விட்டால் தகவலை எழுதவோ படிக்கவோ முடியும்.
அந்த ஃபார்முலா தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அந்த என்கிரிப்ட்/டீகிரிப்ட் பார்முலா தெரிந்து விட்டால் ஒரு சாதாரண சைபர் செக்யூரிட்டி ஸ்பெசலிஸ்ட் EVM இயந்திரத்தில் உள்ள தகவலை எழுதவோ, படிக்கவோ, மாற்றியமைக்கவோ முடியும்.
தேர்தல் ஆணையம் யார் கையில் உள்ளது என்பது நமக்கு தெரியும்.‌ பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முக்கிய மாற்றங்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை மாற்றியதுதான்.
EVM இயந்திரங்களை மாற்ற அவற்றுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை. Wi-fi மூலமே அதை தொடர்பு கொள்ள முடியும். எனவே, அறையை பூட்டி சீல் வைத்து விட்டோம் என்று மார்தட்டுவது கோமாளித்தனம்.
"சைபர் செக்யூரிட்டி" என்ற ஒரு உயர்படிப்பு உள்ளது. அந்த படிப்பில் மிண்ணனு இயந்திரங்களை எப்படி ஹேக் செய்வது, இணையத் தளங்களை எப்படி ஹேக் செய்வது, ஹேக் செய்வதை எப்படி தடுப்பது போன்ற பாடங்கள் உள்ளன.
சில முட்டாள்கள் "எதிர்கட்சிகள் ஏன் நிரூபிக்க வில்லை" என்று கேட்கிறார்கள். எதிர் கட்சிகளிடம் அந்த ஃபார்முலா இல்லை. அவ்வளவுதான்.
இன்னும் சில முட்டாள்கள் "அப்படி என்றால் எதிர் கட்சிகள் எப்படி வெற்றி பெறுகின்றன" என்று கேட்கிறார்கள். பிஜேபி தங்கள் கூட்டணி வெற்றி பெற எத்தனை இடங்கள் தேவையோ அத்தனை இடங்களை மட்டுமே மாற்றியமைப்பார்கள். எல்லா இடங்களையும் மாற்றி அமைத்து மாட்டிக் கொள்ள நாக்பூர் மேலிடம் முட்டாள்கள் அல்ல.
பிஜேபியின் முதல் அஸ்திரம் - எதிர் கட்சி வோட்டுக்களை பிரிப்பது. அல்லது பிரிந்தது போல கணக்கு காட்டுவது.
இரண்டாம் அஸ்திரம் - EVM தில்லுமுல்லு
மூன்றாவது அஸ்திரம் - எம்எல்ஏ/எம்பிக்களை விலைக்கு வாங்குவது.
நான்காம் அஸ்திரம் - ரெய்டு நடத்தி பணிய வைப்பது
தமிழர்கள் ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணிக்கு வாக்களித்து, அதிமுகவை அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிப்பது காலத்தின் கட்டாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக