வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

ரஜினிக்கு பதிலாக தினகரன் மீது சவாரி செய்ய பாஜக மும்மரம்

Ka Deena : · ரஜினி வர மறுக்கிறார் என்று தெரிந்தவுடன் யாரை முதலமைச்சர் ஆகவிடாமல் கைது செய்து சிறையல் அடைத்தார்களோ அவர்களின் உதவியையே நாடியுள்ளது மத்திய பாஜக. தினகரன் டில்லிக்கு தனி விமானத்தில் வரவைக்கப்பட்டு வழங்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறார். டில்லி எஜமானர்களிடம் அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு வந்திருப்பார் தினகரன்.. அந்த நம்பிக்கையை காக்க திமுக-வை வீழ்த்துவதே நோக்கம் என்ற புள்ளியில் இணைய தன்னுடைய மூத்த இரு அடிமைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்..
சந்திப்புகள் நிகழும். ஒன்றினைவார்கள். ஏனென்றால் அடிமைகளின் சுபாவம் ஒன்று தான். சுயலாபத்திற்காக சுயமரியாதை இழந்து மண்டிபோடுவது.. அது இவர்களுக்கு ஆரம்பம் முதலே கைதேர்ந்த கலை.
உடனே அந்த பக்கமிருந்து மாலன்களும், சுமந்த்களும் கூடவே முருகன்களும் இணைப்புக்கு பின்னர் அதிமுக வீழ்த்த முடியாத கட்சியாக உருவெடுத்துள்ளது என்று வாசிப்பார்கள். பத்திரிக்கை துறையினரும் நடுநிலையாளர்களும் அதிமுகவின் இணைப்பு ராஜதந்திரம் என்றெல்லாம் பேசி தேர்தலில் திமுகவின் வெற்றி கடினமானது என்ற தோற்றத்தை ஊதுகுழலாகி விவாதம் நடத்துவார்கள்.
இதெல்லாம் சாத்தியமில்லை.!! திமுகவின் வெற்றி என்பது உறுதிசெய்யப்பட்ட ஒன்று.!! அதிமுக மீதமிருப்பவர்களையும் வேண்டுமானால் கூட்டிக்கொண்டு வரட்டும்.!!
பிகு: தயவுசெய்து அதிமுக போன்ற கட்சிகள் அழிவது, தமிழகத்திற்கு நல்லதல்ல என்று உருட்டுவோர் இத்தனை வருடங்களாக ஆளும் பாஜக அரசை அதிமுக எத்தனை முறை கண்டித்துள்ளது எந்த மாநில உரிமையை காத்துள்ளது என்பதை தெரிவிக்கவும் .  May be an image of 14 people and text that says 'IVE ©2.3k அமமுக செயலாளர் BREAKING NEWS திமுகவை வீழ்த்துவதே ஒரே நோக்கம் டிடிவி NE "ஜெயலலிதா தொண்டர்கள் ஒற்றுமையுடன் தினகரன் அறிக்கை சசிகலாவின் கரத்தை வலுப்படுத்தவேண்டும்" செயலாளர் சிறைக்கொட்டடியில் NEWS #முக்கியச் செயலாளர் சி.ஆர்.சாஸ்வதி அமமுக ஒற்றை குறிக்கோளில் ஒரு தாய் நிற்போம்: ஒற்றைக் குறிக்கோளில் அனைவரும் ஒன் றுபட் நிற்போம் டிடிவி.தினகரன் நாம் #மு 8ம் தேதி சசிகலாவின் வருகையை திருவிழா போல் கொண்ட தயாராகி வருகிறோம்: தினகரன் NE நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு சரித்திரம் படைப்போம் -டிடிவி தினகரன் # சி.ஆர்.சரஸ்வதி அமமுக கொள்கை செயலாளர் றைக்கொட்டடியில் டடியில் துன்பங்களைத் தாங்கி, நாம் அத்தனை பேரும் ஒன்றுபட்டு புதிய சரித்திரம் படைப்போம்: வந்துள்ளார் சசிகலா தினகரன் னகரன் "வரும் 8ம் தேதி சசிகலாவின் வருகையை திருவிழா ூயல்லிதா கட்டிக்காத்த இயக்கத்தை பொலிவுட போல கொண்டாடவுள்ளோம்" மீட்டெடுக்க வேண்டும்" NEWS Oதமர 0207P'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக