வியாழன், 25 பிப்ரவரி, 2021

பாகிஸ்தான் சிறுபான்மையினரை பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளது – இ மு மு கவுன்ஸில்

Imran Khan
Rishvin Ismath : · பாகிஸ்தான் அந்நாட்டு சிறுபான்மையினரை பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளது – இலங்கை முன்னாள் முஸ்லிம்களின் கவுன்ஸில் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் மதமற்றவர்களுக்கான ஆதரவு அமைப்பாக இலங்கை முன்னாள் முஸ்லிம்களுக்கான கவுன்ஸில் 2016 ஆம் ஆண்டு இலங்கையில் முன்னாள் முஸ்லிம்களால் நிறுவப்பட்டது. பேச்சுச் சுதந்திரம், மனித உரிமைகள், மதச்சார்பற்ற மனிதநேய மற்றும் சுதந்திர சிந்தனைக்கு ஆகியவற்றிற்காக நாம் செயற்படுகின்றோம். இலங்கை முன்னாள் முஸ்லிம்களின் கவுன்ஸில் ஆனது முன்னாள் முஸ்லீம் அமைப்புகள், மனிதநேய மற்றும் நாத்திக அமைப்புகளின் சர்வதேச வலையமைப்பின் ஒரு அங்கமாக, இணைந்து செயற்படுகின்றது. 2021 மார்ச் 23 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் திரு. இம்ரான் கான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருவதால், திரு. கான் அவர்களின் கவனத்திற்கு பின்வருவனவற்றை முன்வைக்க இலங்கை முன்னாள் முஸ்லிம்களின் கவுன்ஸில் விரும்புகின்றது :
1. இஸ்லாத்தை விட்டு வெளியேறும் பாகிஸ்தான் குடிமக்கள் பாதுகாக்கப்படுவதையும், அவர்கள் பாகிஸ்தானில் அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வதையும் பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும். பாகிஸ்தானில் வாழும் முன்னாள் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்வதுடன், தமது அடையாளத்தை மறைத்து வாழவும் வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள். அவர்கள் தாங்கள் வாழ்வதற்கான பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உள்ளனர். இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அதற்காக சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
2. பாகிஸ்தான் அதன் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதில் தோல்வி அடைந்துள்ளது :
a. பாகிஸ்தானின் மதநிந்தனைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு இலங்கைக்கு அகதிகளாக வரும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ளது. கிறிஸ்தவர்கள், அஹமதியாக்கள், இந்துக்கள், நாத்திகர்கள் மற்றும் ஏனைய மத சிறுபான்மையினர் பாகிஸ்தானின் மத நிந்தனைச் சட்டம் காரணமாக இவ்வாறு இலங்கைக்கு அகதிகளாக வந்துள்ளனர். பாகிஸ்தான் உடனடியாக இந்த மதநிந்தனைச் சட்டத்தை ரத்து செய்து, மத நிந்தனைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் முழமையாக விடுதலை செய்ய வேண்டும்.
b. இந்து, கிறிஸ்தவ மற்றும் பிற மத சிறுபான்மையினரின் சிறுமிகளை கடத்துவதையும், பலாத்காரமாக இஸ்லாத்திற்கு மதமாற்றுவதையும் பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும்.
c. இந்து கோவில்கள், அஹ்மதியா மஸ்ஜிதுகள் மற்றும் ஏனைய மத சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை சிதைக்கும் குற்றவாளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அதிகாரபீடம் சட்டரீதியான தண்டனையை செயற்படுத்த வேண்டும்.
d. ஆள் அடையாள ஆவணங்கள் மற்றும் பிற அரசாங்க பதிவுகளில் பிரஜைகளின் மத அடையாளத்தைக் குறிப்பிடுவது நீக்கப்பட வேண்டும்.
3. பாகிஸ்தானில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களையும், வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்கும்படி பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக்கொள்கிறோம். அண்மையில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டது. இந்த சிலை தெற்காசியாவின் ஒருங்கிணைந்த பாரம்பரியத்தின் ஒரு அம்சமாகும். இதுபோன்ற அனைத்து வரலாற்றுச் சின்னங்களும், தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களும் எதிர்காலத்தில் சிதைக்கப்படும் ஆபத்தில் இருந்து அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.
4. தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தோற்கடிப்பதற்காக இஸ்லாமிய மதக் கல்வி பாடசாலைப் பாடத்திட்டத்திலிருந்து முற்றாக நீக்கப்பட்டு மதசார்பற்ற, அறிவியல் அடிப்படையிலான மதசார்பற்ற கல்வி முறை அறிமுகம் செய்யப்படல் வேண்டும்.
5. பாக்கிஸ்தானிய அரசிலிருந்து மதம் வேறாக்கப் படுவதுடன், ஏழாம் நூற்றாண்டு இஸ்லாமிய மதக் கோட்பாட்டை கைவிட்டு, பாகிஸ்தான் நவீன யுகத்திற்குப் பொருத்தமான ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்றம் பெற வேண்டும்.
6. உங்கள் நாடாளுமன்றத்தின் (தேசிய சட்டமன்ற) உறுப்பினர் மெளலானா சலாஹுதீன் ஐயூபி சில நாட்களுக்கு முன்னர் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைகிறோம். இந்த நவீன யுகத்தில் இவ்வாறு நடந்திருப்பது வெட்கக்கேடான விடயமாகும். 1400 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்ததாக சொல்லப்படும் ஒரு தவறை அடிப்படியாக வைத்து இன்றும் சிறுமிகளின் வாழ்வு சிதைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. குழந்தை திருமணங்களை நிறுத்தவும், சிறார்களைப் பாதுகாக்கவும் குறைந்த பட்ச திருமண வயதாக 18 ஐ நிர்ணயிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் ஒரு பாகிஸ்தானிய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பத்தில், மேற்படி சிக்கலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட, மதச்சார்பற்ற அழகான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேம்.
- இலங்கை முன்னாள் முஸ்லிம்களின் கவுன்ஸில் (CEMSL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக