ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க நமச்சிவாயம் பாஜகவில் புகலிடம்!·


  • /tamil.samayam.com : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரும் 22ஆம் தேதி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு.
  • சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சமபலமாக இருப்பதால், வரும் 22 ஆம் தேதி காங்கிரஸ் அரசு தனது பெரும்பாண்மை நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று முன்தினம் (பிப்ரவரி 18) உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனை தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவை சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என சட்டப்பேரவை செயலர் முனுசாமி அறிவித்திருந்தார்.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ், என் ஆர் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக