புதன், 17 பிப்ரவரி, 2021

ரவுடி என்கவுண்டர்- போலீசாரை தாக்கி தப்பி ஓடியபோது அதிரடி . உதயநிதி மன்றத் தலைவர் தலையைத் துண்டித்தவர்

பிரபல ரவுடி என்கவுண்டர்- போலீசாரை தாக்கி தப்பி ஓடியபோது அதிரடி
கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணா

.maalaimalar.com :பண்ருட்டி: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரை சேர்ந்தவர் வீரா என்கிற வீரங்கையன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு கொலை-கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. கடலூர் உழவர்சந்தை அருகே ரவுடி வீராவுக்கு சொந்தமான பழக்கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீரா வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் வீராவை பின்தொடர்ந்து சென்றனர். இதனை வீரா கவனிக்கவில்லை.
சுப்பராயலு நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் வீரா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல் வீராவை சுற்றி வளைத்தது.உதயநிதி  மன்றத் தலைவர் தலையைத் துண்டித்தவர்  என்கவுன்ட்டர்!



கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அரிவாளால் வீராவை வெட்டினர். இதில் வீரா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் ஆத்திரம் தணியாத அந்த கும்பல் வீராவின் தலையை துண்டித்தது. பின்னர் வீராவின் தலையை அருகில் குப்பங்குளம் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் முன்பு வீசி விட்டு சென்றனர்.

வீரா கொலை செய்யப்பட்ட தகவல் கடலூர் பகுதியில் இரவு நேரத்தில் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

வீராவை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையும் நடந்தது. இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

வீராவை வெட்டிக்கொன்ற கும்பல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மலட்டாறு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் மலட்டாறு பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. போலீசார் அவர்களை விரட்டி சென்று சுற்றி வளைத்தது.

அப்போது அந்த மர்ம கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. இதில் போலீசார் தாக்கப்பட்டனர். அதில் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் போலீசாரையும் அரிவாளால் வெட்ட முயன்றார்.

உஷாரான போலீசார் ஒருவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது சுருண்டு விழுந்து இறந்தார்.

போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டவரின் பெயர் கிருஷ்ணா( 30). அவர் கடலூர் குப்பங்குளத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஆனார்.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணா நேற்று இரவு கடலூரில் நடந்த வீரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர்.

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட வீராவுக்கும், தற்போது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அதன் பேரில்தான் வீரா கொலை செய்யப்பட்டுள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரவுடி கிருஷ்ணா சுட்டுக்கொல்லப்பட்டதும் அவரது வந்தவர்கள் தலைதெறிக்க ஓடினர்.

உஷாரான போலீசார் அவர்களில் 6 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவங்கள் கடலூர், பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உதயநிதி  மன்றத் தலைவர் தலையைத் துண்டித்தவர்  என்கவுன்ட்டர்!

minnnambalam :திமுக இளைஞர் அணித் தலைவர் உதய நிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் தலையைத் துண்டித்து சென்ற இளைஞரை, போலீஸார் என்கவுன்ட்டர் செய்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பாகியுள்ளது.

கடலூர் - திருப்பாதிரிபுலியூர் குப்பன்குளம் பகுதியில் வசிக்கும் வீரா என்ற ரவுடி, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவராக இருந்துவருகிறார், 2015இல் சதீஷ் என்ற இளைஞரை வீரா வெட்டிக் கொலை செய்தார். வீராவுக்கு கடலூர் முக்கிய தொழில் அதிபர் ஒருவர் உரம் போட்டுவந்தார், இதனால் வீரா பெரிய ரவுடிகள் டீமுடன் செல்வாக்காக வலம் வந்துகொண்டிருந்தார்.

சதீஷின் நண்பர்களில் சிலரை சமீபத்தில் பார்த்த வீரா, “ உங்கள் தலையை ஒரு நாளைக்கு எடுக்கப்போகிறேன்” என்று மிரட்டியுள்ளார். தகவல் கேள்விப்பட்ட சதீஷின் நண்பர்களான விக்கி என்ற விக்னேஷ்வரன் அவரது மச்சான் கிருஷ்ணா இருவரும் சேர்ந்து வீராவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். .

விக்கிக்கு கஞ்சா பழக்கம் உண்டு. ஆள் சேர்த்து எட்டுபேர் கொண்ட குழுவுடன் நேற்று பிப்ரவரி 16ஆம் தேதி, இரவு வீரா வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரா அவரது வீட்டிலிருந்து சுமார் 200 அடி தூரத்தில் உள்ள வீதியில் புல்லட்டை நிறுத்தி அதன் மீது உட்கார்ந்திருக்கிறார். கண் இமைக்கும் நேரத்தில் விக்கி ஆட்கள் வீரா தலையில் கட்டையால் அடித்ததும் மயங்கிப்போய் கீழே சரிந்துவிடுகிறார், உடனே கிருஷ்ணா என்றவன் வீரா தலையை அறுத்து எடுக்க, அதைக் கையில் எடுத்துப்போய் சதீஷ் வீட்டு வாசலில் போட்டுவிட்டுத் தப்பித்து விடுகிறார்கள்.

சம்பவம் நடந்த 15 நிமிடங்களில் போலீசுக்கு தகவல் தெரிந்ததும் எஸ்.பி.அபினவ் அனைத்து இன்ஸ்பெக்டர்களையும் அலர்ட் செய்தார். அந்த கொலைக் கும்பலின் செல்போன்கள் லொக்கேஷன் கண்டறிந்து, மைக்கில் இஞ்ச் பை இஞ்சாக தகவல்களை தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஒருகட்டத்தில் சிங்கம் பாணியில், சைபர் கிரைம் டீம், அந்தக் கும்பல் , மேல் பட்டாம்பாக்கம் வழியாக பண்ருட்டி புதுப்பேட்டை வழியாகச் செல்கிறார்கள் என்று கண்டுபிடித்துச் சொன்னது. அனைத்து போலீஸாரும் வீதிக்கு வந்து வாகன சோதனையில் தீவிரம் காட்டினார்கள், அவர்களுக்குப் பின்னால் எஸ்.பி.தனிப்படையையும் சென்றது.

புதுப்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் தீபன் வாகன சோதனையிலிருந்தபோது ஒரு பைக் வேகமாகப் பறக்க அந்த பைக்கை விரட்டி சென்று விழுப்புரம் மாவட்டம் பார்டரில் வளைத்துப் பிடித்தார், அதன் பிறகு ஒன் பை ஒன்னாக குற்றவாளிகளைப் பிடித்தனர் போலீஸார்.

பிடிபட்டவர்களிடம் விசாரணை செய்தபோது வீரா தலையைத் துண்டித்தது கிருஷ்ணா என்பது தெரியவந்ததும், எஸ்.பி.அபினவ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவசரமாக ஸ்பாட்டுக்கு சென்ற எஸ்.பி பிடிபட்டவர்களிடம் விசாரனை செய்கிறார்.

உடனே கிருஷ்ணாவைச் சிறப்பு விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்போது அவர் தப்பித்து ஓட முயன்றபோது எஸ்.ஐ.தீபன் வைத்திருந்த கை துப்பாக்கியால் சுட்டதால் சம்பவ இடத்திலேயே குருவிபோல் சுருண்டு விழுந்தார் கிருஷ்ணா.

எஸ்.ஐ.தீபன் சென்னையிலிருந்தபோது வல்லரசு என்ற ரவுடியை என்கவுண்ட்டர் செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

மனிதாபிமானம் இல்லாமல் கொடூரமாகக் கொலை செய்வதற்கு கஞ்சா போதையும் முக்கிய காரணம் என்கிறார்கள் போலீஸார். கடலூர் மாவட்டத்தில் குக் கிராமங்கள் முதல் நகரம் வரையில் பரவியுள்ளது கஞ்சா வாடை.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக