வியாழன், 4 பிப்ரவரி, 2021

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்தார்

. Vishnupriya R - /tamil.oneindia.com : சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 161 இன்படி தமிழக சட்டசபையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

இந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்தார். இந்த நிலையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். மேலும் இந்த விடுதலை தொடர்பான முடிவை எடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக