புதன், 10 பிப்ரவரி, 2021

ஜெயலலிதா, சசிகலா சொத்துகளை ஏன் பறிமுதல் செய்யவில்லை : திமுக கேள்வி!

minnambalam : ொத்துக்குவிப்பு வழக்கில் மூன்றாம், நான்காம் குற்றவாளிகளான இளவரசி, சுதாகரனின் சொத்துகளை பறிமுதல் செய்துள்ள தமிழக அரசு, முதல் குற்றவாளியான ஜெயலலிதா மற்றும் இரண்டாம் குற்றவாளியான சசிகலா ஆகியோரது சொத்துகளை ஏன் பறிமுதல் செய்யவில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாற்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய திறந்தவெளி அரங்கத்தினை அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியன் இன்று (பிப்,10) காலை திறந்து வைத்தார்.அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்றாம், நான்காம் குற்றவாளிகளான இளவரசி, சுதாகரனின் சொத்துகளை பறிமுதல் செய்யும் தமிழக அரசு, முதல் குற்றவாளியான ஜெயலலிதா மற்றும் இரண்டாம் குற்றவாளியான சசிகலா ஆகியோரது சொத்துகளை ஏன் பறிமுதல் செய்யாமல் உள்ளது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் உள்நோக்கத்துடன் அரசு செயல்படுவதாகவே பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர் எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய முதலமைச்சர் பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் சொத்துகளை முடக்கி, அவற்றை அரசுடமையாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்ற தோல்வி பயத்தினாலேயே, அதிமுகவினரும், அமமுகவினரும் தங்களது சண்டையை மறைக்க முயல்வதாகவும் மா. சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கவின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக