புதன், 24 பிப்ரவரி, 2021

திருவண்ணாமலையில் பள்ளி மாணவர் மீது கடும் தாக்குதல்: முன்னாள் மாணவர் கைது - இருவர் மீது வழக்குப் பதிவு

tamil.news18.com :திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனின் அண்ணனுக்கும், அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் இன்னொரு மாணவனுக்கும் இடையே சிறுசிறு தகராறுகள் ஏற்பட்டுள்ளன. அந்த தகராறில், கடந்த 16ம் தேதி பள்ளி வ ளாகத்தில் வைத்து 10ம் வகுப்பு மாணவனுடன் 12ம் வகுப்பு மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உச்சகட்டமாக 10ம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். கூடவே முன்னாள் மாணவன் ஒருவரும் தாக்கியுள்ளார். இதை சக மாணவன் வீடியோ எடுத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் போலீசார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் மாணவர்கள் நான்கு பேரின் எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்பப்பட்டனர்.  இந்த நிலையில்தான், மாணவன் தாக்கப்பட்ட வீடியோ காட்சி, திங்கட்கிழமை காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது. இந்தநிலையில், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் செல்வம் உத்தரவின்பேரில் கல்வித்துறையினர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

விசாரணையின் முடிவில் பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன், கீழ்பெண்ணாத்தூர் காவல் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கீழ்பெண்ணாத்தூர் போலீசார் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து பள்ளியில் படித்துவரும் மாணவன் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் மாணவன் சிவராஜை கைது செய்தனர். இதுதொடர்பாக சாரதி, லட்சுமணன் உள்ளிட்ட ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக