செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

திமுக.,வினர் அளித்த வேல் வாங்க மறுத்த கனிமொழி

dinamalar : மதுரை : மதுரையில் தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க.,வினர் அளித்த முருகப்பெருமான் வேலை கனிமொழி எம்.பி., வாங்க மறுத்து தள்ளிவிட்டார். மதுரையில் கனிமொழி இரண்டு நாள் தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலை அமைக்கும் பணி நடக்கிறது. அதை பார்வையிட சென்ற போது வடக்குமாசி வீதி தி.மு.க., வட்ட செயலாளர் பாலு, பகுதி செயலாளர் சரவணன் ஆகியோர் கனிமொழிக்கு வெண்கலத்தால் ஆன வேல் கொடுக்க முயன்றனர். டென்ஷன் ஆன கனிமொழி முகத்தை சுளித்துக்கொண்டு வாங்க மறுத்தார்.

latest tamil news
பாலு கூறுகையில் “திருப்புவனம் அருகே எங்கள் ஊரில் உள்ள கோயிலுக்கு கொண்டு செல்ல வேல் செய்தோம். அதை ஆட்டோவில் கொண்டு சென்றோம். கனிமொழியை பார்க்க செல்லும்போது ஆட்டோவிலேயே வேலை வைத்திருந்தால் அதை யாராவது எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் கையில் கொண்டு சென்றோம். ஆனால் அதை அவருக்கு தான் கொடுக்க நினைத்தோம் என கனிமொழி நினைத்து விட்டார். நாங்கள் அவருக்கு வேல் கொடுக்கவில்லை” என்றார்.



தமிழகத்தில் பா.ஜ.,வின் வெற்றி வேல் யாத்திரைக்கு பின் ஓட்டுக்காக ஹிந்துக்களை திராவிட கட்சிகள் விமர்சிப்பதை குறைத்து வருகின்றன. இதன் எதிரொலியாக சமீபத்தில் திருத்தணியில் பிரசாரம் செய்த தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வேல் வழங்கியபோது. அதை அவர் வாங்கிக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக