ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

ஹரி நாடாருக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்! பூஜையுடன் படம் தொடங்கியது

May be an image of 3 people and people standing

tamil.samayam.com :வனிதா விஜயகுமார் பிக் பாஸ் 3 ஷோவுக்கு பிறகு சின்னத்திரையில் அதிகம் பிஸியான நபராக மாறிவிட்டார். அவர் குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
மேலும் சொந்தமாக youtube சேனல் தொடங்கி அதில் சமையல் வீடியோ, மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அவர் தற்போது ஹரி நாடாருக்கு ஜோடியாக '2K அழகானது காதல்' என்ற படத்தில் நடிக்கிறார். ஹரி நாடார் உடல் முழுவதும் கிலோ கணக்கில் நகைகள் போட்டுக்கொண்டு இருப்பதால் அதிகம் பாப்புலர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் ஷூட்டிங் நேற்று சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் தொடங்கியது.
இந்த அறிவிப்பை வனிதாவே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். "Pooja today..filming starts...proud to be part of this project...good script" என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக