வியாழன், 11 பிப்ரவரி, 2021

யாழ்மையவாதம் பற்றி சமூகவலையில் கருத்து பரிமாற்றம்

Chinniah Rajeshkumar  :   யாழ் மையவாதம் விமர்சிக்கப்பட வேண்டிய விடயம் மட்டுமல்ல அதற்கான மாற்றும் அவசியம். ஆனால் ஓரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்பவர்களை பொதுமைப்படுத்தி யாழ்ப்பாணி என அடையாளம் சூட்டும் அரசியல் பொதுமைப்படுத்தும் அரசியல் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.   
நேற்று ஒரு சந்திப்பில் பிள்ளையான் இரு முறை யாழ்ப்பாணி என்ற பதத்தை பாவித்து அவர்கள் மட்டக்களப்பை நாசம் செய்யவந்திருக்கிறார்கள் என்ற தொனியில் பேசியுள்ளார்.
வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சமூகம் மேலாகவோ இனம் மேலாகவோ இவ்வாறான வெறுப்புணர்வு ஊட்டப்படுவதன் பின் விளைவுகள் மிக பயங்கரமானவை.
யூதர்களுக்கெதிரான கருத்தியலில் இருந்து ருவண்டா , பொஸ்னியா வரைக்கும் இந்த வெறுப்பு அரசியலின் விளைவை நாம் பார்த்திருக்கிறோம்.  
தமிழர்களுக்கெதிரான இன அழிப்பு, முஸ்லிம் மக்களுக்கெதிரான புலிகளின் இனச்சுத்தீகரிப்பு ஆகியவை இலங்கையர்கள் நேரடியாக அனுபவித்தவை. பிள்ளையான் இருந்த அமைப்பும் இப்போ சேர்ந்த இடமும் கருத்தியலைப்பொறுத்தவரை  ஒரே சிந்தனை மட்டத்தில் இருப்பதும் ஓரு காரணமாக இருக்கலாம். நாட்டின் தலைவர் நான் சிங்கள பௌத்தன் என்னும் போது பிள்ளையான் யாழ்ப்பாணி என விளிப்பதில் ஆச்சரியமேதுமில்லை.
குறுகிய அரசியல் நலன்களுக்காக எதிரிகளை கண்டுபிடிப்பதும் பிரித்தாளும் அரசியலை செய்வதும்  நல்லதல்ல.

பிள்ளையானின் அபிவிருத்தி நோக்கும் மக்களுக்கு அதன் மூலம் நன்மை செய்ய வேண்டும் என நினைப்பதும் நல்ல விடயமும் அவரது அரசியல் தேர்வும். மட்டக்களப்புக்கு  நூலகத்தை நிறுவுவதை விட மக்கள் மத்தியிலான வெறுப்புணர்வை தமது குறுகிய அரசியல் லாபத்துக்காக வளர்க்காமல் இருப்பது மாபெரும் கல்வி.

வரதன் கிருஸ்ணா இது நேற்றல்ல எல்லாக்காலங்களிலும் உண்டு ஸ்ரீதரன் வடக்கத்தாயான் என்று விழித்தது நீண்டகாலமாகிவிடவில்லை..... 

Jagapriyan Somasundaram சாணக்கியனின் திடீர் வளர்ச்சியின் விளைவாக இது இருக்கலாம். அவர் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்து இளைஞர்களையும் கவர்ந்த ஒருவராக அரசியலில் வளர்ச்சி அடைந்து வருவது ஒரு காரணம். மற்றையது சமூகங்களுக்கிடையே பிரித்தாளும் அரசியல் அரசின் நிகழ்ச்சி நிரலில் இருப்பது போலவே இதுபோன்ற பிளவு படுத்தலும் இருக்கலாம். அவர்களுக்கு இவ்வாறு பேசுவதற்கான விருப்பம் இல்லாதவிடத்தும்கூட அவர்களுக்கு இந்த விடயத்தில் அழுத்தம் இருக்கலாம்.... 

K.T. Maaran : 90-93 களில் யாழ்நகரில் நான் சந்தித்த சில கிழக்கு போராளிகளின் ஆதங்கத்தை இங்கு பதிவிடுகிறேன். யாழ்பாணத்தில் இருக்கிற ஒரு பிரதேச அரசியல் பணிமணை இருக்கிறமாதிரிக்கூட இல்லை எங்கள் மாவட்ட அரசியல் பணிமணை.( வசதிகள் அடங்கலாக) என்று சொல்லி தங்களை சற்று தாழ்த்தியே பார்கப்படுவதாய்!! இந்த வித்தியாசங்கள் ஏதையாவது நீங்கள் இருந்த காலத்தில் உணர்தீர்களா?? குறிப்பு- நான் கிழக்கே தலை வைச்சு படுத்ததே கிடையாது.... 

 Chinniah Rajeshkumar : K.T. Maaran யாழ் மையவாதம் இருக்கிறது. அவ்வாறான நிலமைகள் இருந்தன . கருணாவின் பிரிவுக்காக சொல்லப்பட்ட காரணங்களில் இவ்வாறான ஏற்றத்தாழ்வுகளும் வலுவான காரணங்கள். இங்கு பிரச்சனை பொதுமைப்படுத்தல். யாழ்ப்பாணத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவரும் யாழ்ப்பாணி என்பது தான் பிரச்சனை...

 K.T. Maaran : Chinniah Rajeshkumar ஆம் அப்பவே அதை அறிந்து உணர்ந்திருந்ததால் தான் எனக்கு கருணாவின் பிரிவு ஆச்சரியத்தை தரவில்லை....

 Theva Thasan : மேட்டுக்குடி யாழ்ப்பாணி என்கிற சொற்கள் நீக்கப்பட வேண்டும்... வெள்ளாளியம் பொருத்தமானது ஆனாலும் தலித்தியம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது போல் வெள்ளாளியத்தையும் மறுத்து விடுவார்கள்... தமிழர்கள் என்ற பதத்திற்குள்ளேயே அனைத்து நாசங்களையும் நடாத்தி முடித்து விடுகிறார்கள்....

 Jagapriyan Somasundaram : Theva Thasan உண்மையிலேயே யாழ்ப்பாண மேலாதிக்க சிந்தனைக்கு வெள்ளாளியம் என்ற பதம்தான் சரியானது. கிழக்கில் சாதிப்பிரிவினைகள் ஒடுக்குமுறைகள் பெரிய அளவில் இல்லையாதலால் அவர்களுக்கு இது சம்பந்தமான புரிதல்கள் இல்லை.... 

Chinniah Rajeshkumar : Theva Thasan யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கும் சாதி அடக்குமுறைக்கு ஆள்படுபவனும் யாழ்ப்பாணி என்பது தான் பிரச்சனை. யாழ் மையவாதம் , மேலாதிக்கம் என்ற கருத்தை கூட அந்தந்த கருப் பொருள் பொறுத்து பயன்படுத்தலாம். ஆனால் யாழ்ப்பாணி என ஒரு அரசியல் தலைவர் விளிப்பது மிக மோசமான செயல். ... 

Chinniah Rajeshkumar : Jagapriyan Somasundaram வெள்ளாளியம், யாழ் மையவாதம் போன்ற சொற்களை விடய தானங்களை பொறுத்து பயன்படுத்தலாம்.... 

Pakkiyarajah Kopinathan : Theva Thasan தமிழர் என்ற பதத்துக்குள் வெள்ளாளியம் யாழ்மையவாத அரசியல் செய்தால் சரி...... 

Theva Thasan : Pakkiyarajah Kopinathan அதுதானே நடக்கிறது..... 

Puthiyavan Rasiah : Theva Thasan நீங்கள் யாருமே( ஏ9 ல் ஆனையிறவுக்கு அந்தப்பக்கம் இருப்பவர்கள்), மற்றைய இடங்களில் இருப்பவர்களால் வன்னி உட்பட, ஏன் யாழ்ப்பாணி என அழைக்கிறார்கள் என்ற அடிப்படையை ஏற்க மறுப்பது தெரிகிறது.. ஜீவா உட்பட நீங்கள் யாழ்ப்பாணத்தார் என்பதற்காக பெருமைப்படலாம். உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட சாதிய ஒடுக்குமுறைக்கு சமமான இழிவு படுத்தலைச் சந்தித்த நாம், political correctness ல் கவனமாக இருக்க வேண்டும். என்னே தத்துவம்...... 

Theva Thasan : Puthiyavan Rasiah எனக்கு யாழ்ப்பாணம் பெருமையல்ல உண்மையைச்சொன்னால் வெட்கம் ஏனெனில் வெள்ளாளியத்தை (வெள்ளாளியம் சாதியல்ல ஒரு கருத்தியல்) வேரறுத்தால் நான் தமிழன் என பெருமை கொள்ளலாம் அதற்கு அடுத்தபடிதான் யாழ்ப்பாணம்.... 

 Sivanesan Singarasa : Chinniah Rajeshkumar Chinniah Rajeshkumar யாழ்பாணியம் என்பது வெள்ளா ஆதிக்க சாதியை குறிக்கின்றது இதற்கும் வெள்ளாளர் தவிர்ந்த ஏனைய சாதி சமூகங்களுக்கு எந்த தொடர்பு இல்லை ஏனைய சாதி சமூகங்கள் இன்றுவரையும் யாழ்ப்பாணிகளால் ஆளப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் இதை ஏனைய சாதி சமூகங்கள் புரிந்து கொள்வது இல்லை இதை புரிந்துகொள்ளும் அறிவாற்றலும் இல்லை.... 

Pakkiyarajah Kopinathan : Sivanesan Singarasa இந்தப்பதம் பிரித்தானியர் ஆட்சியில் பிரயோகிக்கப்பட்டுத்தானே இருக்கின்றது. அதாவது அப்போது பிரித்தானியரோடு பணிபுரிந்த அத்தனைபேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வெள்ளாளியத்தவரே. ஆதலால் ஒட்டுமொத்தமாக ஆங்கிலேயருக்கு எதிரான எதிர்ப்பலை சிங்களவரிடம் தோன்றும்போது யாழ்ப்பாணியினரே அவர்களுக்கு உடந்தையாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துதானே உள்ளது... .. 

David Krishnan : அமெரிக்கைவையும் யாழ்பாணத்தையும் தட்டினால்தான் அறிவு ஐீவிகள் என்பதுபோல் ஆகி விட்டது....எதுக்கு எடுத்தாலும் யாழ்பாணம்தானா.....????.. 

Pakkiyarajah Kopinathan : David Krishnan எதுக்கெடுத்தாலும் யாழ்மையவாதிகள்தானே சொறிஞ்சுகொண்டு இருக்குவினம் ஐயா.... 

Sabes Sugunasabesan : முக நூலில் நுளையும் போதெல்லாம் யாழ்பாணத்தானை /மேற்குடி யாழ்ப்பாணதானை சாடும் வாசகங்கள் சகசம். அது ஒரு style. இது ஒரு அங்கீகாரத்தை பிரயோகிப்பவர்களுக்கு கொடுக்கிறது. பிள்ளையான் மேற்குடியை குறிகாமல் பொதுவில் இதை பிரயோகித்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. முன்னர் ஒரு காலத்தில் ஒரு நாடகம் கொழும்பில் மேடை ஏற்றப்பட்டது. ‘He comes from Jaffna’. சமூகங்களுக்கு லேபல் போட்டு விதியாசப்படுத்துவது நமது கெட்ட சுபாவம். ஆபத்தானது. ... 

 Vimal Kulanthaivelu : மற்றவர்கள் போலில்லாமல் பிள்ளையான் மைன்ட் வோய்ஸ் என நினைத்து சத்தமாக பேசிட்டார் போல.... 

Sivanesan Singarasa : யாழ்ப்பாணிகள் தான் இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டவர்கள்.... சிறீ சிறீஸ்கந்தராசா : "கள்ளத்தோணிகள்" இவர்கள் மறந்துவிட்டார்கள்!.... Puthiyavan Rasiah : ஆம், ஆபத்தானது தான். மட்டக்களப்பான் பாயில ஒட்ட வைப்பான், சூனியம் செய்து மாப்பிள்ளை பிடிப்பான் என்று கண்ணியமாக யாழ்ப்பாணி பேசுவது போல பிள்ளையான் கண்ணியமாக பேசாதது மனவருத்தமாக இருக்கிறது.... " இந்த வன்னிக் குரங்குகளுக்கு எதுக்கு படிப்பு என்று என்னை ஏசிய ரீச்சருக்கு, மதிப்புக்குரிய யாழ்ப்பாணத்து ரீச்சர் என விழித்து எழுதாதது என் தவறுதான் ராகவன்.... 

Chinniah Rajeshkumar : Puthiyavan Rasiah இந்த அவமதிப்புகள் யாழ் மேலாதிக்க , சாதிய சிந்தனை முறையிலிருந்து எழுகின்றன. அது அல்ல பிரச்சனை . யாழ்ப்பாணி எனகூவி அவன் நாசம் செய்ய வந்திட்டான் என ஒரு அரசியல் வாதி பேசும் போது அதன் தாக்கம் வேறு. உதாரணமாக இந்தியர் எல்லாம் பெட்டிக்கடை போட்டு தொழிலாளிகளை சுரண்டுகிறார்கள் எனறு ஒரு நிறவாதி சொல்லி இந்திய மக்களுக்கெதிரான கருத்தியலை உருவாக்குவது போல். இந்தியர்கள் பலர் இந்துத்துவாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என விமர்சிப்பது வேறு. இந்தியர் பெட்டிக்கடை வைத்து சுரண்டுகிறார்கள் என பொதுமைப்படுத்துவது வேறு. கண்ணியமாக எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஒட்டு மொத்த சமூகத்தையும் பொதுமைப்படுத்துவது தான் பிரச்சனை. ஒரு கடைக்காரரோ அல்லது சாதாரண குடிமகனோ அவ்வாறு வார்த்தைகளை பிரயோகித்திருந்தால் பிரச்சனை இல்லை. ஒரு அரசியல் வாதிக்கு பொறுப்புணர்வு வேண்டும். .... 

 

 Pakkiyarajah Kopinathan : உண்மையிலையே பிள்ளையான் அவர்கள் #யாழ்ப்பாணி என்ற பதத்தை அவர் உணர்ச்சிவசப்பட்டே கூறுகின்றார். அவர் இந்த பதத்தை கூறுகின்றார் என்றால் போராளியாக இருந்தபோது ஏற்பட்ட அழியாத, நீங்காத சுட்டெரிக்கப்பட்ட வடுவே. மட்டக்களப்பார், வன்னிப் பெடியனுகள் என்ற கருத்தை ஆளமாக ஊடுருவ வைத்தது தமிழீழ விடுதலைப்புலிகளே. அதன் பழக்கத்தில் கூறுகின்றாரே தவிர அது அவரது மட்டுப்படுத்தப்பட்ட சிந்தனை மட்டமல்ல. இதனை நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால் அவருடன் அருகில் இருந்து அரசியல் வியூகங்களை எங்களுக்கு எடுத்துரைக்கும்போது மிகவும் தெளிவாக கூறினார் யாழ்ப்பாணி என்ற சொல் எனது வாயில் என்னை அறியாமல் வரும் சொல். இந்த வார்த்தை உண்மையிலையே தவிர்க்கப்படவேண்டியது. த.தே.கூட்டமைப்பு என்ற கட்சி தலமையையே நான் யாழ்ப்பாணி என்று குறிப்பிடுகின்றேன். நீங்களாச்சும் அவ்வாறு கூறாமல் அவர்களை வடகு மேட்டுமையினர் அல்லது வெள்ளாளர் என்றே கதைக்கவேண்டும் எழுதவேண்டும் என்று கூறியது அந்த இடத்தில் சிந்திக்கவைத்தது. 

அப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் சாதி குறைந்தவர்கள் வஸ்சில் செல்லவேண்டுமானால் தரிக்கப்பட்ட பெட்டிக்குள் குந்தியிருந்து போன சரித்திரங்களும் உள்ளது அண்ணன் கேள்வியுற்று இருக்கின்றேன் என்றதும்... அவர் மறுகணமே என்னிடம் கூறியது நாம் யாழ்ப்பாணி என்று கூறுவது பொருத்தமற்றதே, யாழ் மேலாதிக்க வெள்ளாளர் பரம்பரையினரை தவிர மற்றைய அனைவரும் பொதுமையானவர்களே. அவர்களுக்கான அரசியல் யாழ்ப்பாணத்தில் வேரூண்டப்படவில்லை வேரூண்டவும் வேளாளர் விடமாட்டார்கள், கிழக்கிழும் அதனையே செய்கின்றனர் என்றார். ஆகவே யாழ்ப்பாணி என்ற பதம் பிரயோகிக்கப்பட்டது பிழைதான். அதற்காக குறுகிய அரசியல் லாப நோக்கத்துக்காக அப்பதத்தை பிரயோகிப்பவர் அல்ல. இவர் அரசியல் லாப நோக்கத்துக்காக அப்பதம் பாவிக்கவும் மாட்டார். நோக்கவும்மாட்டார். கருத்தியலைக் கொண்டவருமல்ல. தன்னால் முடிந்தால், முடியுமானால் யாழ்ப்பாண மக்களுக்கும் இணக்க அரசியலூடாக நன்மையைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய மனப்பாங்கை கொண்டவரே அவர்....... 

 Chinniah Rajeshkumar : Pakkiyarajah Kopinathan நன்றி. இவ்வாறான உரையாடல்கள் தான் செழுமைப்படுத்தும். எனக்கு அவரது அரசியல் ஏற்புடையதில்லை எனினும் அவரது செயல்களை மதிப்பவன். ... 

Amirthalingam Baheerathan : என்று தான் ஓயும் எம் பிரதேச, சாதி வாதங்கள். .... 

Pakkiyarajah Kopinathan : Amirthalingam Baheerathan யாழ் மையவாத வெள்ளாளியம் ஒழியும்போது..... அதுவா ஒழியும் ஐயா... 

Amirthalingam Baheerathan : Pakkiyarajah Kopinathan நன்றி ஐயா. .... 

Annam Sinthu Jeevamuraly : யாழ் மாவட்டத்துக்குள் நான் பிறந்திருந்தாலும், என்னைப்பொறுத்த வரையில் "யாழ்ப்பாணிகள்" என்ற வார்த்தை பிரயோகம் எனக்கு உறைப்பதும் இல்லை அப்படியொரு உணர்வு நிலையும் இல்லை. யாழ்பாணத்தான் என்ற உணர்வு நிலை, வெள்ளாள அதிகார மையத்தால் கட்டியமைக்கப்பட்ட வெற்று உணர்ச்சி அரசியல். யாழ்ப்பாண அதிகார வர்க்கங்களால் பாதிக்கப்பட்ட, கிழக்கு, முஸ்லீம் , மலையக மக்கள் யாழ்ப்பாணிகள் மீது அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றும் பொழுது உணர்ச்சிவசப்படாமல் கேட்கப் பழகவேண்டும். ஆண்டாண்டு காலமாக மட்டக்கிளப்பான், பாயோடை ஓட்ட வைக்கிறவர்கள், சோனிகள், தோட்டக்காட்டார் என எள்ளிநகையாடி வந்த யாழ்ப்பாணிகளின் அரசியலை, பிள்ளையான் போன்றவர்களினால் அதே பணியில் தான் எதிர்த்து விமர்சனம் செய்ய முடியும். யாழ்ப்பாணிகள் அதையிட்டு உணர்சிவசப்பட்டு கோபம் கொள்வது ,அவர்கள் இன்று விருப்புகின்ற நல்லிணக்க அரசியலுக்கு முற்றும் எதிரானது என்பதை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.. 

கிழக்கு, முஸ்லீம் , மலையக மக்களுடன் உண்மையில் இணக்க அரசியலை செய்யவிரும்பும் யாழ்ப்பாணிகள் , அவர்களின் அரசியல் சமூக விமர்சனங்களை காது கேட்டப் பழகுவதால் தான் குறைந்த பட்சமாவது இணக்க அரசியலுக்கு வரமுடியும். ஆண்டாண்டுகாலமாக , அரசியல் குழிபறிப்புகளும், திமிர்த்தனங்களுடனும் செயற்பட்டு வந்த யாழ்வெள்ளாள அதிகார வர்க்கம், இன்று முதல் "நான் நல்லவன் என்னை நம்பு" என்று ஒரே நாளில் மனம்திருந்தி விட்டதாக அறிக்கை விட்டால் யார்தான் நம்புவார்கள். "யாழ்ப்பாணிகளின் " அதிகாரத்துக்குட்பட்டு அவர்களின் எல்லைக்குள்ளேயே வாழும் தலித் மக்களை இன்று வரைக்கும் சகமனிதர்களாக கருதியதில்லை. நிலைமை இப்படியிருக்க.கிழக்கு, முஸ்லீம் , மலையக மக்கள் நப்பவேண்டும் என்று எப்படி யாழ்ப்பாணிகள் எதிர்பார்க்க முடியும். யாழ்ப்பாணிகள் என்ற அரசியல் விமர்சனத்தை தனியே வெறுப்பரசியல் என்று மட்டும் சுருக்கி பார்க்கமுடியாது என்று கருதுகின்றேன்..... 

 Chinniah Rajeshkumar : Annam Sinthu Jeevamuraly இங்கு பிரச்சனை உறைப்பது உறைக்காதது இல்லை. யாழ்ப்பாணி என எனை யாரும் அழைத்தால் எனக்கும் உறைக்காது. ஆனால் இது ஒரு அரசியல் கோசமாக வரும் போது உள்ள அதன் கருத்தியல் பரிமாணம் தான் முக்கியம். நாளை இந்த கோசத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு மட்டக்களப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஏழை விவசாயியோ அல்லது ஒரு சிறுவர்த்தகனோ அகதியாய் குடியேறிய யாழ்ப்பாணத்தான் ஒருவனோ பாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடாது. பொதுவாக இவ்வாறான தாக்குதல்களில் அகப்படுபவர்கள் வசதி அற்றவர்களே. .... 

 Pakkiyarajah Kopinathan : Chinniah Rajeshkumar இந்நக் கருத்து மிகவும் ஆரோக்கியமான ஆழமான கருத்துத்தான் ஐயா. இவ்வாறு பதிவிட்டிருந்தால் ஏற்க்கூடியதாக இருந்திருக்கும். மாறாக பிள்ளையானின் அரசியல் லாபத்துக்காக யாழ்ப்பாணி என்ற சொல்லை பிரயோகிக்கின்றாரா என்ற சந்தேகம், கேள்வி ஏற்கமுடியாதவொன்று..... 

 Chinniah Rajeshkumar : Pakkiyarajah Kopinathan இந்த விடயத்தை நான் எடுத்ததே அதற்காக தான். எதிர் நிலையில் இருந்தும் ஆரோக்கியமாக உரையாடல் அவசியம்..... 

Jagapriyan Somasundaram : சிங்கள மக்களிடம் சிங்கள அரசியல்வாதிகள் சென்று வெறுப்பரசியலை தூண்டும் வகையில் தெமலயா , தம்பியா போன்ற சொல்லாடல்களை பயன்படுத்தும்போது அதற்கெதிராக மோட்டுச்சிங்களவன் போன்ற சொல்லாடல்களை தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் பயன்படுத்துவது சரியென்றோ அதே பாணியில்தான் தமிழ் முஸ்லிம் மக்கள் பதிலடி கொடுக்கவேண்டுமென்றோ இதனையிட்டு கோபப்படுவதனால் சிங்களமக்கள் விரும்பும் நல்லிணக்கம் அவர்களிடமிருந்து விலகிச்சென்றுவிடுமென்றோ நான் ஒருபொழுதும் கூறமாட்டேன்.... 

 Pakkiyarajah Kopinathan : Chinniah Rajeshkumar நீங்கள் gnanam ஐயாவுடனும் பிள்ளையான் அவர்களுடனும் நெருங்கிப் பழகியுள்ளீர்கள் அவர்களின் அரசியல் போக்கு பற்றியும் அறிந்திருப்பீர்கள் என்று அறிவேன் sir. இருந்தும் உங்கள் பதிவுகளில் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்கவேண்டும் என்பதற்காகவே தங்கள் பதிவுகளில் நானும் கருத்துக்களை பதிவிட்டேன்...... 

 Yoga Valavan Thiya : இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரொறன்டோவில் பிள்ளையானின் வேட்கை புத்தகம் வெளியிடப்பட்டது. ஏற்பாட்டை கிழக்கின் மைந்தர்கள் என்ற அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்வில் என்னையும் விமர்சன உரையாற்ற அழைத்து இருந்தனர். ஆனால் கிழக்குமாகாணத்தை சேர்ந்த எவரும் உரையாற்றவில்லை ஏற்பாட்டாளர்களிடம் ஏன் என்று கேட்டபோது, பலரும் தயங்குகின்றனர் என்றனர். அந்த கூட்டத்துக்கு நான் செல்ல கூடாது என பல நண்பர்கள் எனக்கு அறிவுறுத்தினர் சிலர் என்னை முகநூலில் புளொக் பண்ணினார்கள். ஆனாலும் கலந்து கொண்டு உரையாற்றினேன். புலிகள் என்ற ஒரு அமைப்புக்குள் ஏற்பட்ட பிரச்சனையை வைத்து ஒட்டு மொத்த வடமாகாண தமிழர்களையும் முத்திரை குத்துவது நல்லதல்ல. வடமாகாணத்தில் பிறந்த பரந்தன் ராஜன்தான் , 2004 ல் கருணாவையும், பிள்ளையானையும் காப்பாற்ற உதவியவர்கள் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ... 

 Kannan Thiru Pannagam : மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது பிரதேசவாதம் இனவாதம் பேசுபவர்களை பார்த்தால் அவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பார்கள் .... தினம் கூலிக்கு போகின்றவர்களுக்கு தான் பிரச்னை வசதி குறைந்தவர்கள் இதட்குள் அகப்படுகின்றார்கள் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் ..... 

Sivamohan Sumathy : பிரச்சனையென்றால்: இந்த போஸ்ட் பிள்ளையானின் அரசியல் வங்குரோத்தையும், பிற்போக்கையும்தான் எடுத்துக் காட்டுகின்றது. மார்க்ஸிய மொழியில் சொல்லப்போனால் பிற்போக்கு அரசியல். அது தமிழ் முஸ்லிம் மக்களை அபாயத்துக்குள் இட்டுச்செல்லும். கிழக்கு மாகாண தமிழ் மேலாதிக்கத்தின் ஒரு பக்கம்தான். யாழ்ப்பாணிக்கும் இந்த பிள்ளையானின் கருத்தியலுக்கும் ஒரு வித்தியாசம் கிடையாது.... 

கணன் சுவாமி : இந்தோனேஷிய பூர்வீகத்தை உடைய ஜனாதிபதி ஐயா சுத்த சிங்கள பெளத்த எண்டு பெருமை சொல்றார் உவங்கள் யாழ்ப்பாணிய பிறாண்டுறாங்கள்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக