திரு சகாயம் அவர்களின் கட்சி தொடங்கும் விழா காணொளியை கண்டேன் . மிகவும் பொறுமையாக முழுவதும் பார்த்தேன் மிகுந்த ஏமாற்றம் அளித்தது.
சகாயம் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக இருந்தவர் .ஆனால் தமிழகத்தை பற்றி எந்த விடயமும் தெரியாத ஒருவர் பேசியது போல இருந்தது .
பேசிய பலரும் வெறும் அப்பாவிகளாக அல்லது வேண்டுமென்றே ஒன்றும் தெரியாதவர்கள் போல நடிப்பவர்களாகவே தெரிந்தனர்.
ஊழல் என்ற ஒற்றை மந்திரமே போதும் தங்களை கரைசேர்த்து விடும் என்று கருதுவதாக தெரிகிறது.
தமிழ்நாட்டின் கல்வி களவு போகிறதே அதை பற்றி ஒரு வார்த்தை ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புக்கள் களவாடாப்படுகிறதே அதை பற்றி ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வியாபாரங்கள் திட்டமிட்டு மார்வாடிகள் கைக்களுக்கு போகிறதே அதை பற்றி ம்ம்ம்
தமிழ்நாட்டின் மீது ஒரு பொருளாதார போர் நடக்கிறதே அதைப்பற்றி ..ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக்கு சாவு மணி அடிக்கிறார்களே/ அதைப்பற்றி ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டில் மீண்டும் பார்ப்பனீயம் சமஸ்கிருதம் எல்லாம் நுழைகிறதே? அதை பற்றி ம்ம்ம்ம்ம்
பணமதிப்பு இழப்பு பற்றி ம்ம்ம்ம்ம்
ஜி எஸ் டி வரி பற்றி ம்ம்ம்ம்ம்
இவை எல்லாம் கொஞ்சம் சாம்பிள்தான் இன்னும் என்னன்னவோ கேள்விகள் இருக்கின்றன .
சகாயம் குழுவிடம் நல்ல நோக்கமும் கிடையவே கிடையாது.
பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர அன்னா ஹாசாரே போன்றோர் எடுத்த காவடியை தமிழ்நாட்டில் திரு சகாயம் ஐ ஏ எஸ் மூலம் பாஜக முன்னெடுக்கிறது என்பதில் சந்தேகமே கிடையாது.
முடிவாகவே தெரிகிறது சகாயம் இன்னொரு ஆர் எஸ் எஸ் அடியாள்தான்.
ஆனால் ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே உள்ளது .
ஒருவேளை இந்த அடியாள் இதை கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு இன்னொரு ஆட்டுக்கார அண்ணாமலை ரேஞ்சாக இருக்கலாமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக