வியாழன், 25 பிப்ரவரி, 2021

தீவிர சிகிச்சைப் பிரிவில் தா.பாண்டியன் - முத்தரசன் அறிக்கை!

cpi party senior leader d.pandiyan admitted at hospital

 nakkeeran : சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நேற்று (24/02/2021) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.     இந்த நிலையில் தா.பாண்டியன் உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.           தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணி ராஜன், டாக்டர். தினேஷ் உள்ளிட்ட உயர்நிலை சிறப்பு மருந்துவர்கள் தா.பாண்டியன் உடல் நிலையைக் கண்காணித்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக