திங்கள், 1 பிப்ரவரி, 2021

தூத்துக்குடி அருகே காவல் உதவி ஆய்வாளர் வாகனம் ஏற்றிக் கொலை

thinathanthi : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரக்கு வாகனம் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதவி ஆய்வாளர் பாலு, கொற்கையில் ரோந்து பணியில் இருந்த போது போதையில் தகராறில் ஈடுபட்ட முருகவேல் என்ற நபரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த முருக வேல் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்.ஐ பாலுவை கொலை செய்து விட்டு தப்பியுள்ளார். வாகனம் ஏற்றி உதவி ஆய்வாளரை கொன்ற முருகவேலை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக