புதன், 17 பிப்ரவரி, 2021

கொள்கை சார்ந்த அரசியலை மக்கள் புரிந்து கொள்கிறார்களா? Are we deserved for Ideological politics!!

Kandasamy Mariyappan - திராவிட ஆய்வு : · தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்கே திராவிட சித்தாந்தம் மிகவும் முக்கியமான ஒன்று, மாற்று கருத்தில்லை! ஆனால், திமுக தலைவர் திரு. முக. ஸ்டாலின், பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் மற்றும் உதயநிதி அவர்கள் வேலுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த, தங்களை முற்போக்குவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர்... அய்யோ திமுக கொள்கையை விட்டு விலகி சென்று விட்டது! இது திமுகவிற்கும் நல்லதில்லை, தமிழ்நாட்டிற்கும் நல்லதில்லை என்று பதிவிட்டு பேசி வருகின்றனர்! மேலும், திமுக Soft Hindutvaவை கடைபிடிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் வைக்கின்றனர்!
இதனை எப்படி பார்ப்பது!
உண்மையில் இந்த மண், கொள்கைக்கான மண்தானா!?
Are we deserved for Ideological politics!!???!!!
காரணம், கொள்கை என்பது ஒரு கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மட்டுமே கடைபிடித்தால் போதுமா! மக்களும் அதனை உள்வாங்கிக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் வாழ்ந்து காட்ட வேண்டாமா!
தமிழ்நாட்டில் நடந்தது மற்றும் நடப்பது என்ன!!??
கொள்கை, புண்ணாக்கு என்று வாழ்ந்து வந்த கலைஞரையும், திமுகவையும் அழிக்க வேண்டும் என்ற வெங்கட்ராமன்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வண்ணம் கலைஞர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடமும், மத்திய அமைச்சரவையிலும் திரு. ராமச்சந்திரன் கொடுத்திருந்த பொழுதும், தனது தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிந்த பிறகும்...
இந்த நாட்டுக்கே ஒரு பிரச்சினையாக இருந்த எமர்ஜென்சியை...
அச்சுத மேனன் தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் கட்சியே எதிர்க்காத போதும், கொள்கை, புண்ணாக்கு என்று ஒற்றை மனிதராய் எதிர்த்து நின்று ஆட்சியை பறிகொடுத்தவர் கலைஞர்!
ஆதரவு கொடுத்த கேரளா கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர்ந்தது!
அதுமட்டுமல்லாமல், தனது மகன், தனது அக்காள் மருமகன் உட்பட கட்சி தொண்டர்கள் சிறையில் வாடிய பொழுதும் உறுதியோடு இருந்தவர் கலைஞர்!
அதனை தொடர்ந்து ஜனதா தலைமையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒரு மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியவர் கலைஞர்.
ஒட்டு மொத்த இந்திய ஒன்றியமும் காங்கிரசை தோற்கடித்த நிலையிலும்...
ஆட்சி பறிபோகும் வரையிலும் எமர்ஜென்சியின் தாக்கம் எந்த மக்கள் மீது படாமல் பார்த்து கொண்டாரோ...
எந்த மக்களுக்காக கொள்கையை உயர்த்தி பிடித்து காங்கிரசை எதிர்த்து நின்று ஆட்சியை இழந்தாரோ....
அதே தமிழ்நாட்டு மக்கள் 1977ல் கலைஞரை தோற்கடித்தனர்!!!
எங்கே அந்த கொள்கை, புண்ணாக்கு!!
அதேபோன்று, ஏறத்தாழ 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சிக்கு வந்து பெண்கள் முன்னேற்றம், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி என்று அந்த கொள்கை, புண்ணாக்கை உயர்த்தி பிடித்து ஆட்சி செய்த நிலையிலும்...
போஃபர்ஸ் ஊழல் என்ற மிகப்பெரிய பூகம்பத்தால் ஒட்டு மொத்த இந்திய ஒன்றியமும் காங்கிரசுக்கு எதிரான மனநிலையில் இருந்தது பொழுது...
அந்த கொள்கை, புண்ணாக்கை உயர்த்திப் பிடித்து, காங்கிரஸை எதிர்த்து ஒன்றிய அளவில் தேசிய முன்னணியை உருவாக்கி 89 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால்....
இன்றைக்கு எப்படி RSS/பாஜக அரசு, பழனிச்சாமி அணி, பன்னீர்செல்வம் அணியை கட்டப் பஞ்சாயத்து மூலமாக சேர்த்து வச்சு இரட்டை இலை சின்னத்தை கொடுத்ததோ...
அதேமாதிரி, ஜெயலலிதா அணி ஜானகி அணியை கட்டப் பஞ்சாயத்து மூலமாக சேர்த்து வச்சு இரட்டை இலை சின்னத்தை கொடுத்த அன்றைய ராஜீவ் தலைமையிலான RSS/காங்கிரஸ், அதிமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்து...
ஒரே ஆண்டில் திமுகவை முற்றிலுமாக நிராகரித்த மக்கள்தான் இந்த தமிழ்நாட்டு மக்கள்!!!
எங்கே அந்த கொள்கை, புண்ணாக்கு!!!
தேர்தலில் தோற்ற பிறகும் சும்மா இல்லாமல், மீண்டும் கொள்கை புண்ணாக்கு என்று...
தன் இனத்திற்காக குரல் கொடுத்தும், இலங்கையிலிருந்து வந்த அமைதிப்படையை வரவேற்க செல்லாமலும் RSS/ காங்கிரஸ் கட்சியின் கோபத்திற்கு ஆளானார் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள்!
விளைவு, ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை கலைத்துவிட்டனர் வெங்கட்ராமன்கள்!!!
சரி, அடுத்து வந்த தேர்தலில் கொள்கை, புண்ணாக்கு என்று இருந்த திமுகவை மக்கள் தேர்ந்தெடுத்தார்களா என்றால்...
விடுதலைப்புலிகளை வைத்து ராஜீவை கொன்று விட்டார் கலைஞர் என்று கட்சி அலுவலகங்களை சூறையாடி, கட்சி நிர்வாகிகளை அடித்து உதைத்து, திமுகவை தோற்கடித்து அழகு பார்த்து மகிழ்ச்சியடைந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்!!!!
விளைவு, 1991ல் ஆட்சிக்கு வந்த மாண்புமிகு, ஆளுமை நிறைந்த, இரும்பு பெண்மணி இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்....
IT நிறுவனங்களை பெங்களூர், ஹைதராபாத்திற்கு விரட்டி விட்டு...
பாபர் மசூதியை இடிக்க அதிமுக தொண்டர்களை அனுப்பி வைத்து,
கொலை செய்து, கொள்ளையடித்து, 27 வயது ஆண் பிள்ளையை தத்தெடுத்து 100 கோடி செலவில் திருமணம் செய்து, பத்திரிக்கைகளை, நீதிமன்றத்தை நசுக்கி காட்டாட்சியை கொடுத்தார்...!!!
மீண்டும் 96ல் சிரமபட்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் சும்மா இருந்தாரா!!?
கொள்கை புண்ணாக்கு பேசி தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கிறேன் என்று IT Policy அமைத்து IT தொழிலை வளர்த்தெடுத்து, உள்கட்டமைப்பை விரிவாக்கி...
ம்க்கும், அதற்குள் ஜெயலலிதாவின் தாயுள்ளம் மக்கள் முன் வர, அவரை மன்னித்து மீண்டும் திமுகவை 97 பாராளுமன்ற தேர்தலில் தோற்கடித்தனர் தமிழ்நாட்டு மக்கள்!!!
கொள்கை புண்ணாக்கை சிறிது சமரசம் செய்தாலும் Article 370, Uniform Civil Code, பாபர் மசூதி பற்றி பேசவே கூடாது என்ற கட்டளையுடன் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தார் கலைஞர்...
அய்யய்யோ திமுக கொள்கை தவறிடுச்சு, இசுலாமியர்களுக்கு எதிரானவர் கலைஞர் என்று...
பாபர் மசூதியை இடிக்க ஆட்களை அனுப்பிய ஜெயலலிதாவிற்கே எங்கள் வாக்கு என்று 2001ல் மீண்டும் திமுகவை தோற்கடித்தனர் தமிழ்நாட்டு மக்கள்!!
இலங்கை தமிழர்களை ஆதரிக்கிறது திமுக, விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறது திமுக, விடுதலைப்புலிகளை வைத்து ராஜீவை கொன்று விட்டார் கலைஞர் என்று சொன்ன தமிழ்நாட்டு மக்கள்...
காங்கிரஸுடன் சேர்ந்து தனது சொந்த இனத்தையே அழித்து விட்டார் கலைஞர், கலைஞர் ஒரு இனத் துரோகி என்று அடித்தார்களே ஒரு அந்தர் பல்டி!!!
எங்கே அந்த கொள்கை, புண்ணாக்கு!!!
கொள்கையை கடைப்பிடித்து வந்த பொழுது, அந்த கட்சியை பலப்படுத்த இந்த நடுநிலையாளர்கள், கொள்கை பிடிப்பாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் எங்கே சென்றனர்!!!
இந்த மக்களுக்கு கொள்கை ஒரு கேடா!!!
திமுக,
சித்தாந்தத்தை சுமக்கும், வாக்கரசியலில் உள்ள ஒரு அரசியல் இயக்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். சில சமரசம் இருக்கத்தான் செய்யும்!
திமுக, ஆட்சியில் இருந்தால்தான் கொள்கையை காப்பாற்ற முடியும், கொள்கையை சட்டமாக்க முடியும்!
அதனால்தான், எந்த சூழ்நிலையிலும் திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று RSS, தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுகவை மட்டுமே குறி வைத்து தாக்கி கொண்டே இருக்கிறது!
முற்போக்கு சிந்தனையாளர்களும், நட்ட நடுநிலையாளர்களும் இதனை உணர்ந்து கொண்டு திமுகவிற்கு பக்கபலமாக இருக்க வேண்டுமே ஒழிய, சிறு தவறுகளை பெரிது படுத்தி திமுகவை வலுவிழக்க செய்து தமிழ்நாட்டை மீண்டும் 1920க்கு முன் எடுத்து சென்று விடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக