வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

கேபி_பார்க் குடியிருப்பில் 864 வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் பணிகள் தொடங்கியது.

G Selva :   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..
கேபி_பார்க் குடியிருப்பில்  864 வீடுகளை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் பணிகள் அதிகாரப் பூர்வமாக தொடங்கியது.
குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதி செயலாளர் கே முருகன் முன்னிலையில் குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி வீடுகளில் யாருக்கு எந்த வீடு என்பதை முடிவெடுக்கும் குலுக்கல் இன்று (05-02-2021) தொடங்கியது.
தகரக் கொட்டகைகளிலும் சுடுகாட்டின் ஓரங்களிலும் வாழ வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்காக, தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வந்தது.
மனு கொடுப்பது, தெருமுனை கூட்டம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு, அதிகாரிகள் சந்திப்பு, முற்றுகை போராட்டம், குடியேறும் விழா என இடைவிடாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கம் இன்று வெற்றியடைந்துளளது.
இவ்வியக்கங்களை  தொடர்ந்து நடத்திய கேபி பார்க் CPI-M கட்சி கிளைகள், எழும்பூர் பகுதி குழு, உரிமை போராட்டத்தில் உயிர்ப்புடன் பங்கேற்ற பொதுமக்கள், வழிகாட்டிய தலைவர்கள் அனைவருக்கும் மாவட்டக்குழு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும் புரட்சிகர வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
உழைக்கும் மக்களின் வாழ்வாதார உரிமைக்கான போராட்டத்தை வீரியத்தோடு முன்னெடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக