ஜப்பானில் ஃபுகுஷிமாவிற்கு அருகில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம்
BBC : ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் அதிர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது பெரிதாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை. நிலநடுக்கத்தால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ராயட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
ஜப்பானின் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து நாட்டின் தென்மேற்கு பகுதி வரை உணரப்பட்டுள்ளது.
ஜப்பான்
அரசு தொலைக்காட்சியான எஹெச்கே டிவி, ஃபுகுஷிமா அணுஉலை ஏதும் பிரச்னை
ஏற்பட்டுள்ளதா என சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன
என்றும், இருப்பினும்
தற்போதுவரை அணுஉலையில் எந்த சேதாரமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.... இந்த
நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஜப்பானின் கடலோர நகரமான நிமி நகரலிருந்து 70
கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக