சனி, 20 பிப்ரவரி, 2021

40 சீட்டுகள்! கட்சிகளை இணைத்து காட்டுகிறேன் பழிவாங்க மாட்டேன் சசிகலா உத்தரவாதம் ..எடப்பாடி மறுப்பு ? புரோக்கர் அமித் ஷா பேச்சு தோல்வி?

 பொதுச்செயலாளர்

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: மலையளவுக்கு ஆசைப்பட்ட சசிகலா, இப்போது கடுகளவாவது ஏதாவது நல்லது நடந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த "40" சீட்டுகள்..! சசிகலா சென்னைக்கு வருவதற்கு முன்பிருந்தே, தமிழக அரசியலில் களை கட்டி வருகிறது.. ஜெயிலுக்கு போய்விட்டு வருவதால், அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் ஆதரவு தனக்கு ஏராளமாக இருக்கும் என்று கணக்கு போட்டார் சசிகலா. 

சென்னைக்கு காரில் வந்த அன்றும், 23 மணி நேர தொண்டர்களின் வரவேற்பை பார்த்து மிரண்டும் போய்விட்டார்.. அதனால், எப்படியும் அதிமுக நிர்வாகிகள் நம்மிடம் தாவி வருவார்கள் என்று நினைத்தா சசிகலா "கூடிய விரைவில் உங்களை சந்திக்கிறேன்" என்று செய்தியாளர்களிடம் வேனில் உட்கார்ந்தபடியே சொன்னார்.. அதிமுகவில் ஒருபுயலே வீச போகிறது என்ற ரீதியில் எதிர்பார்ப்பும் கிளம்பியது. ஆனால். ஒன்றுகூட நடக்கவில்லை.. எல்லாமே புஸ்ஸென்று போய்விட்டது. எதனால் சசிகலா அமைதியாக இருக்கிறார்? ஏதோ பெரிய அளவுக்கு மெகா பிளானை தீட்டி வருகிறார் என்ற யூகங்கள் இன்றும் வலம் வருகின்றன.



உத்தரவாதம் இப்படிப்பட்ட சூழலில்தான் மற்றொரு விஷயம் கசிந்து வருகிறது.. அதாவத, இவர்களை இணைக்கும் முயற்சியில் பாஜக ஒரு கட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அது இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுச்செயலாளர் பதவியை தனக்கு தந்தால் கட்சியை இணைத்து காட்டி திமுகவுக்கு டஃப் தர முடியும் என்றும், பாஜக சொல்கிறபடியே நடப்பதாகவும் சசிகலா தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டதாம்..

எடப்பாடி பழனிசாமி அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சிலர் மூலம் பேச்சுவார்த்தையும் நடத்தியதாக தெரிகிறது.. அப்போது தங்களடைய ஆதரவாளர்களுக்கு 40 சீட் தந்தால் போதும், கட்சிகளை இணைத்து காட்டுகிறேன், தனக்கு எதிராக இருந்தவர்கள் மீது எந்த காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்த மாட்டேன் என்ற உறுதியையும் சசிகலா தரப்பு தெரவித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், எவ்வளவு சொல்லியும் எடப்பாடியார் தரப்பு சம்மதிக்கவே இல்லை

பொதுச்செயலாளர் இதற்கு காரணம், சசிகலா சிறைக்கு சென்று வந்துள்ளார்.. மக்களின் ஆதரவும் அவருக்கு பெரிதாக இல்லை.. தென்மண்டலங்களில் மட்டும் ஓரளவு செல்வாக்கு உள்ளது.. அது ஒன்றிற்காக மட்டுமே பொதுச் செயலாளர் பதவியை தந்து, கட்சியை ஒப்படைக்க முடியாது.. 40 சீட்டுக்களையும் தந்து டெபாசிட் இழக்க முடியாது என்பதே எடப்பாடியார் தரப்பின் எண்ணமாக உள்ளது.
அதிர்ச்சி இதை சசிகலா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை போலும்.. பொதுச்செயலாளர் விஷயத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதன் முடிவுகள் எப்படி இருக்குமோ தெரியவில்லை.. ஆனால், அந்த பொறுப்பையும் தனக்கு தராமல், அதிமுக புள்ளிகளும் தன் பக்கம் ஆதரவு தராமல், கேட்ட 40 சீட்களும் தராமல் அதிமுகவின் முடிவுகளால் சசிகலா அதிர்ந்தே போனதாக தெரிகிறது.

அமித்ஷா எனவேதான் அமித்ஷாவிடம் சில தொழில் அதிபர்கள் மூலம் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறாராம்.. இப்போதைக்கு கூட்டணி என்ற ஒரு விஷயத்திற்கு இறங்கி வந்துள்ளார்ம் சசிகலா... முதலில் கட்சிக்குள் சேருவோம்.. கூட்டணியை வைப்போம் அதன்பிறகு மற்ற விஷயங்களை பார்த்து கொள்ளலாம் என்ற முடிவிலும் உள்ளாராம். ஆனால், இது எந்த அளவுக்கு அதிமுகவில் ஒர்க் அவுட் ஆகும்? பாஜக எந்த அளவுக்கு இணைப்பு முயற்சிக்கு உதவி செய்யும் என்று தெரியவில்லை.. பார்க்கலாம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக