Jeyalakshmi C /tamil.oneindia.com : சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிர்கட்சியாக உள்ள திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று ஏபிபி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி 154 முதல் 162 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி 58 முதல் 66 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தின் புதிய முதல்வர் யார் என்ற தெரிந்து விடும்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 154-162 இடங்களில் ஜெயிக்க வாய்ப்பு - ஏபிபி கருத்துக்கணிப்பு
திமுக கூட்டணிக்கு 154-162
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 154 முதல் 162
தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஏபிபி கருத்துக்கணிப்பு
தெரிவித்துள்ளது. 41 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 58-66
அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணிக்கு
58-66 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 28.6
சதவிகித வாக்குகளை மட்டுமே இந்த கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் அந்த
கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுக, மநீம
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2 முதல் 6 இடங்களில் வெற்றி பெறும்
என்றும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக 1முதல் 5 இடங்களில் வெல்லும்
என்றும் ஏபிபி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதர கட்சிகள் 5-9 இடங்கள்
வெல்லும் என்றும் மநீம 8.3 சதவிகித வாக்குகளையும், அமமுக 6.9 சதவிகித
வாக்குகளை பெறும் என்றும் இதர கட்சிகள் 14.8 சதவிகித வாக்குகளைப் பெறும்
என்றும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக