ஞாயிறு, 10 ஜனவரி, 2021

monopoly ஆதிக்கம் crony கேபிடலிசம்.. முகநூலில், வாட்ஸாப்ப் போன்றவைகளில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வழி இல்லையா?

Image may contain: text that says 'Top TpChar Charts hes ans SUN NEWS 00 Signal Signal-க்கு தாவும் பயனாளர்கள்! வாட்ஸ் ஆப்புக்கு வலுக்கும் எதிர்ப்பைத் தொடர்ந்து சிக்னல், டெலகிராம் உள்ளிட்ட செயலிகளை தரவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் பயனாளர்கள்! SUNNEWSTAMIL SUNNEWS 09-JAN-21'

Vivekanadan T : · முதலில் மூன்று விஷயங்களை இதன் பின்னணியில் இருந்து கவனிக்க வேண்டும்.. 1. இந்தியாவில் முகநூல் – ஜியோ கூட்டணியுடன் , அமெரிக்க ஊடங்ககள் வெளிப்படுத்திய முகநூல் தலைமைக்கும் பிஜேபி கட்சிக்கும் இருக்கும் secret கூட்டும் ஹிந்துத்துவா ஆதரவான போக்கும் , இதை வைத்தே வாட்ஸாப்ப் வெளிட்ட இந்த அயோக்கியத்தனத்தை பார்க்கவேண்டும்.... 

2. 2015 ஆண்டு வாட்சப் நிறுவனத்தை வாங்கிய முகநூல் நிறுவனம், அதற்கு முன்னரே , 2012 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் ஆப்பை முகநூல் நிறுவனம் வாங்கி விட்டது....... போன டிசம்பர் மாதம் அமெரிக்க கூட்டமைப்பு வர்த்தகக் கமிசன் மற்றும் 48 மாநிலங்கள் இணைந்து ஃபேஸ்புக் நிறுவனம் அனைத்து சமூக வலைத்தளப் பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி சந்தை ஏகபோகமாக மாறுவதற்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.(US govt, 48 states sue Facebook for abusing power to crush smaller rivals -      Accusing it of anti-competitive conduct by abusing its market power to create a monopoly and crushing smaller competitors)..securemessagingapps. link

3.ஆனால் எதற்கும் மசியவில்லை முகநூல் தலைமை....Agree என்ற பட்டனை அழுத்துவதற்கு முன் ஒன்றை நினைவில் வையுங்கள்..நாம் வாட்சப் ஆபில் உரையாடல்கள், போட்டோ உள்ளிட்ட தகவல்களை சேமித்து அவற்றை மேலாண்மை செய்வதற்கான உரிமை வாட்சப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான முகநூல் நிறுவனத்திற்கு இருப்பதாகக் குறிப்பிட்டு இதற்கு ஒப்புதல் கொடுக்குமாறு கேட்கிறது ..?
இப்படி எல்லா வகையிலும் monopoly ஆதிக்கத்தில் அதற்கு crony கேபிடலிசம் உதவி செய்ய எந்த எல்லைக்கும் போகும் முகநூலில் இருந்தும் , வாட்ஸாப்ப் இருந்தும் விரைவில் வெளியேறுவதை தவிர வேறு வழி இல்லை என்று நினைக்கிறேன்...
...இப்பொழுதைக்கு வாட்சப் செயலி வழியாக முக்கிய தகவல்களை பகிர்வதை நிறுத்தி கொண்டு... திடிரென்று இல்லாமல், மெதுவாக மாற்று செயலிக்கு தாவுகிறேன்..அதற்கு முன் பேக்கப் எடுத்து கொள்வது நல்லது

 economictimes. link

Syed Mehathab Buddeen : எனக்கு தெரிந்த அனைவரையும் இதற்கும் Wicker Me க்கும் VERO True Social க்கும் வாங்க வாங்க என்று அழைத்து கொண்டே இருக்கிறேன் ஏறத்தாழ இரண்டு வருடங்களாக ஆனால்... 

 Vivekanadan T : Syed Mehathab Buddeen Signal and Telegram பற்றிய உங்கள் அனுபவ கருத்து என்ன..? 

Syed Mehathab Buddeen : Vivekanadan T Signal என்பது WhatsApp பை விட அதிகப்படியான 100% பாதுகாப்பானது ஆரம்பத்தில் சிறிய அளவில் ஒவ்வாமை இருக்கலாம் சிக்னலை முதலில் உபயோகிக்கையில் ஆனால் தகவல் பாதுகாப்பு விடயம் என்பதில் சிக்னல் என்னுடைய முதல் சாய்ஸ். Wicker Meயில் ஒரு வாரத்தை தாண்டி தகவல்கள் இருக்காது என்பது ஒரு பெரும் குறை. Telegram ஒரு பொது உலவி அது முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலை கொண்டது பாதுகாப்பு என்பது வாட்சப்பை விட மிக குறைந்தது அதனால் அதை நான் பரிந்துரைப்பது கிடையாது தோழர்.. 

 Syed Mehathab Buddeen : Miller Palaniswamy தற்போதைக்கு வாட்சப்பில் ஸ்கிரின் செக்குரிட்டியை தவிர மற்ற விடயங்கள் வந்துவிட்டன ஆனாலும் அது பாதுகாப்பானது கிடையாது. இதற்கெல்லாம் தலைச்சிறந்த ஒன்று இருந்தது பிளாக்பெர்ரி எனும் அரக்கன் உண்மையில் அதுதான் இதுவரையிலான சிறந்த பாதுகாப்பு முறைமைகள் கொண்டு இருந்தது பயன்பாட்டாளர்களுக்கு என்று.... 

Miller Palaniswamy : Syed Mehathab Buddeen well said, ஆனால் காலத்திற்கு ஏற்ப தன்னை உடனடியாக மாற்றிக்கொள்ளாதால், முக்கியமாக தொடுதிரை கொண்டு வருவதில் மிகுந்த கால தாமதம், அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகளுக்கு மதிப்பளிக்காதது போன்றவற்றால், blackberry தன் மார்க்கெட்டை இழந்தது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக