டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி; விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை - பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!
nakkeeran : டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே குண்டு வெடித்துள்ளது. இதில் சில கார்கள் சேதமடைந்துள்ளன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் டெல்லியின் முக்கியமான பகுதிகள், அரசு கட்டிடங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை, டெல்லியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைக் கருத்தில் கொண்டு அனைத்து விமான நிலையங்கள், முக்கியமான பகுதிகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக