சனி, 2 ஜனவரி, 2021

சென்னையில் ஊழியர்களை உயிரோடு கொளுத்த முயற்சி.. வெளியானது சிசிடிவி.. மக்கள் அலறல்

 Velmurugan P  - //tamil.oneindia.com :   சென்னை: சென்னை தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் இரவில் கடையை அடைக்கும் நேரத்தில் வந்தவர்கள் கேக் கேட்ட போது தராமல் பேக்கரியை மூடியதால், உரிமையாளரை கொலை வெறி தாக்குதல் நடத்திய கும்பல். காலையில் கடையை பெட்ரோல் உற்றி கொளுத்தி அராஜகம் நடத்தியுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருபவர் முருகன்(45) இவர் நேற்றிரவு 10.19 மணியளவில் கடையை மூடிக் கொண்டிருந்தார். அப்போது பொருட்கள் வாங்க நான்கு பேர் கடைக்கு வந்திருக்கிறார்கள். புத்தாண்டு என்பதால் 10 மணிக்குள்ளாக கடையை மூட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருந்துள்ளார்கள்.

பொருள் இல்லை இதனால் இந்த இளைஞர்களுக்கு பொருட்கள் இல்லை என கடையின் உரிமையாளர் கூறியிருக்கிறார். அத்துடன் கடையை அடைக்க முயன்றுள்ளார். அப்போது இளைஞர்கள் எப்படி பொருள் இல்லை என்று சொல்லலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கடை மீது தாக்குதல் அத்துடன் ஆத்திரமடைந்த நான்கு இளைஞர்களும் கடையை அடித்து நொறுக்கி கடையின் உரிமையாளர் முருகன் மற்றும் அவரது சகோதரரை அரிவாளால் அடித்து கற்களை கொண்டு வீசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். உயிருக்கு பயந்து இருவரும் கடைக்குள் சென்று ஷட்டரை மூடிக் கொண்டனர்.
 
கடையை கொளுத்தினர் இதனிடையே அதிகாலை 6.30 மணியளவில் அந்த கும்பல் பேக்கரிக்கு வந்து பெட்ரோல் ஊற்றி மூடியிருந்த கடையை கொளுத்தி விட்டு சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காயத்திற்கு சிகிச்சை பெற்ற முருகன் சேலையூர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களோடு புகார் அளித்துள்ளார்.

சேலையூர் போலீஸ் புகாரின் பேரில் போலீசார் அராஜக கும்பலை தேடி வந்த நிலையில் நான்கு பேர் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தனர். இரவு நடந்த பிரச்சனையில் இரவே சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அராஜகத்தில் ஈடுபட்ட நபர்களை சேலையூர் போலீசார் கைது செய்திருந்தால் காலை அவர்கள் கடையை கொளுத்தி இருக்கமாட்டார்கள் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக