திங்கள், 25 ஜனவரி, 2021

டெல்லியில் நாளை பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்

tamil.news18.com : டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரமாக்கும் வகையில் நாளை குடியரசு தினத்தன்று டெல்லியில் பிராமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். குடியரசுத்தின நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்படாமல் பேரணி நடத்த விவசாயிகள் ஒப்புக் கொண்டதையடுத்து, போலீசார் அனுமதியளித்துள்ளனர்.
இதையடுத்து, காசிப்பூர், சிங்கு, திக்ரி 3 எல்லைகள் வழியாக டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். அதன்பிறகு சிங்கு, திக்ரி, காசிப்பூர், பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய 5 முனைகளில் இருந்து டிராக்டர் பேரணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த பேரணியில் சுமார் 3 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்க தலைவர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக