ஞாயிறு, 17 ஜனவரி, 2021

முதலாளித்துவத்தை ஒருங்கிணைப்பதற்கான “இந்துத்துவா அதிர்ச்சி வைத்தியம்”


madrasreview.com : சாதி பார்ப்பனிய கட்டமைப்பின் அடிப்படையிலான சமூகப் பொருளாதார படிநிலையுடன் புதிய தாராளமயக் கொள்கை ஒன்றிணைந்துள்ளது. இதுவே ‘இந்துத்துவா’ அரசியல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரத் திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தது. 1980-களில் இருந்து புதிய தாராளமயத்தின் மீள் எழுச்சி வெகுஜன மக்களை மேலும் ஓரங்கட்டுவதற்கும், இந்தியப் பொருளாதாரம் மற்றும் அரசியல் மீதான முதலாளிகளின் பிடியை பலப்படுத்துவதற்கும் வழிவகுத்ததுள்ளது.        சாதிய அடிப்படையிலான இந்திய சமூகப் பிரிவினையை ஆதரித்து ஒரு நிலையான சுரண்டல் கட்டமைப்பை இயல்பாக்க முயற்சிக்கிறது முதலாளித்துவம்.  இந்த போக்கு ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ அரசியலுக்கு ஒரு வளமான களத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது.  நுகர்வோர் மீதான அதிர்ச்சி வைத்தியம்..

புதிய தாராளமய சந்தைகளின் எழுச்சி இந்திய நுகர்வு கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை மாற்றியமைத்துள்ளது. இந்திய நுகர்வோரை  ஒற்றை கலாச்சாரத்திற்குள் அடைக்க வழிவகுக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட நுகர்வு கலாச்சாரம் உள்ளூர் உற்பத்தியாளர்களையும், உள்ளூர் உற்பத்தியையும் பாதுகாத்து வந்தது. 

இந்த போக்கை புதிய தாராளவாத போக்கு மாற்றியமைத்துள்ளது. புதிய நுகர்வோர் கலாச்சாரம் ஒற்றை கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. அதை நோக்கி சிறிய உற்பத்தியாளரை பாதிக்கிறது. இந்த போக்கு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பெரும் கார்ப்ப்ரேட் நிறுவனங்களை ஒருங்கிணைக்க வழிவகுக்கிறது. 

இதன் அடிப்படையில்தான் மோடி அரசாங்காம் விவசாய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்திய விவசாய பொருளாதாரம் மற்றும் சமூகம் இரண்டையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக ஒழுங்குபடுத்துகிறது. இந்த போக்கு இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் மீது நிகழ்த்தப்பட்ட அதிர்ச்சி வைத்தியம். 

கார்ப்பரேட் முதலாளித்துவத்திற்கான மறுசீரமைப்பு

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, வங்கி சீர்திருத்தங்கள், தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள், விவசாய சீர்திருத்தங்கள், குடியுரிமை திருத்தங்கள் ஆகிய நடவடிக்கைகள் நிறுவன மரபுகளைப் புறக்கணித்து ஜனநாயக விதிமுறைகளை அடியோடு அழிப்பதற்கு  இந்துத்துவா சக்திகளால் நிகழ்த்தப்பட்ட அதிர்ச்சி வைத்தியம். இந்த மறுசீரமைப்பு இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் சுரண்டலை இயல்பாக்கும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சர்வாதிகார போக்கு கொண்ட இந்துத்துவா சக்திகள் இந்திய சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தை முதலாளித்துவத்திற்கான ஒரு நீடித்த கட்டமைப்பாக உருவாக்கும் வேலையில் அதிதீவிரமாக உள்ளது. 

சிறுபான்மையினர், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான மதவாத தாக்குதல்கள், இந்துத்துவா சக்திகளும் அவர்களின் நட்பு முதலாளிகளின் (crony capitalist) ஒருங்கிணைந்த  வேலைத்திட்டமாக மாறிவருகிறது. இந்துத்துவா சக்திகள் வெகுஜனமக்களின் மீது நிகழ்த்தப்படும் இதுபோன்ற வெறியாட்டங்களை தனது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநாட்டுவதற்கான ஒரு அத்தியாவசிய கூறுகளாகவே பார்க்கிறது. 

வாஷிங்டன் உடனான ஒருமித்த கருத்தியல் 

ஐரோப்பிய பாசிசம் மற்றும் நாசிசத்திலிருந்து இந்துத்துவ சித்தாந்தம் தனது நியாயத்தைப் பெறுகிறது. அதேசமயம் பொருளாதாரம் மற்றும் சட்டங்களை தாராளமயமாக்குதல், தேசிய வளங்களை தனியார்மயமாக்குதல் மற்றும் முதலாளித்துவ உலகமயமாக்கல் போன்ற அனைத்தும் வாஷிங்டன்னுடனான ஒருமித்த கருத்தின் வேளிப்படுகளாகும். 

மோடியின் அரசியல், பொருளாதார கருத்தான குறைந்தபட்ச அரசாங்கம் (minimum government) மற்றும் அதிகபட்ச ஆளுகை (Maximum governance) என்பது இதன் விளைவுதான்.

பாசாங்குதனம் தான் வலதுசாரிகளின் இயல்பு

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆகியவை இரண்டு இந்துத்துவ அமைப்புகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பொருளாதார தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்களை அறிக்கையின் வாயிலாக பிரச்சாரம் செய்தன. ஆனால் இப்போது பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் புதிய தாராளமய திட்டங்களை செயல்படுத்தின. 

பாசாங்குதனமும் கபட நாடகம் ஆடுவதும்தான் மதவாத, வலதுசாரி மற்றும் புதிய தாராளவாத சக்திகளின் இயல்பு. இன்று இந்தியாவில் ஆட்சி செய்யும் சர்வாதிகாரப் போக்கு கொண்ட  இந்துத்துவ முதலாளித்துவம் அரசு இயந்திரத்தையும், ஜனநாயக கலாச்சாரத்தையும் அடியோடு அழிக்க முற்படும் இந்த போக்கு விபத்து அல்ல. அது ஒரு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதாகும்.

சட்ட ஒழுங்கு சீர்குலைவு தற்செயலானது அல்ல

இந்துத்துவா கோட்பாடுகள் அச்சத்துடன் மற்றும் அடிபணிந்த சமுதாயத்தை உருவாக்கும் நோக்கம் உடையது. அதுவே முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு அவசியமாகிறது. எனவே இந்தியாவில் சமகாலத்தில் நடக்கும் சட்ட ஒழுங்கு நெருக்கடி மற்றும் அவற்றின் தோல்வி என்பவை தற்செயலானவை அல்ல. ஆர்.எஸ்.எஸ், பாஜக-வின் அரசியல் மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நிறைவு செய்ய சமூக மற்றும் பொருளாதார மோதல்களையும் மக்களிடையே நெருக்கடிகளை தொடர்ந்து உருவாக்கும். இந்த நடைமுறை இந்துத்துவ சித்தாந்தத்தின் ஒரு முக்கியமான கூறு இதுவே பாசிச கோட்பாடுகளின் அடித்தளம். 

ஜனநாயகத்தை தகர்ப்பது, குடியுரிமையை நிராகரிப்பது, மக்களை வெளியேற்றுவது என்பது முதலாளித்துவத்தின் விருப்பங்களுக்காக  இந்துத்துவா சக்திகள் செய்யும் அதிர்ச்சி வைத்தியம். கலாச்சார இந்து தேசியவாதம் பற்றிய ஒரு மோசடிக் கதையை பரப்புவது மட்டுமல்லாமல், இந்தியாவில் சாதி மற்றும் முதலாளித்துவத்தை இயல்பாக்குவதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உள்நோக்கம்.

தோல்வியடைந்த மோடியின் அரசு 

வேலையில்லா திண்டாட்டம், உச்சகட்ட வறுமை நிலை, குறைந்த தொழில்துறை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் சரிவுதான் மோடியின் சாதனை. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடியை சமாளிப்பதில் மோடி அரசு மோசமாக தோல்வியை சந்தித்துள்ளது. 

எந்தவித முன் எச்சரிக்கையும் செய்யாமல் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கால் இந்தியாவில் உற்பத்தி, விநியோகத்தை சிதைத்துவிட்டது. ஆனால் இந்த நெருக்கடி காலத்தில் பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்கள் செல்வத்தை அதிகப்படுத்திக்கொண்டது.  மோடி அரசு முதலாளித்துவத்தை இந்துத்துவா குணாதிசயங்களுடன் உருவாக்கி வருகிறது. 

முதலாளிகளை பாதுகாக்க, நிலைநிறுத்த மோடியும் அவரது இந்துத்துவ அரசியலும் இந்தியாவையும் இந்தியர்களையும் தியாகம் செய்கின்றது. மில்லியன் கணக்கானவர்களுக்கு துயரமும், சிலருக்கு செழிப்பையும் வாரிவழங்குகிறது மோடி அரசு. 

நம்பிக்கை தரும் டெல்லி போராட்டம்

டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், மாணவர்கள், மத சிறுபான்மையினர் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சாதி, முதலாளித்துவம் மற்றும் இந்துத்துவாவிற்கு எதிரான போராட்டங்கனை நடத்துகின்றனர்.  இந்த நிகழ்வுகள் மதச்சார்பற்ற தாராளமய சமுதாயத்தை மற்றும் அரசியலமைப்பு ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான புதிய நம்பிக்கையை கொடுக்கிறது. 

இந்துத்துவ சித்தாந்தத்தையும் மோடி அரசாங்கத்தையும் தோற்கடிப்பதை உறுதி செய்வதற்காக இந்தியாவின் தெருக்களில் போராட்டங்களைக் கொண்டாட வேண்டிய நேரம் இது. அனைத்து பிரச்சாரங்களும் அரச அதிகாரமும் இருந்தபோதிலும், பாசிசம், நாசிசம் மற்றும் முதலாளித்துவம் மனித வரலாற்றில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

அதேபோல் இந்தியாவில் இந்துத்துவா பாசிசம் மற்றும் முதலாளித்துவமும் சந்திக்க நேரிடும். .

பபானி சங்கர்

நன்றி : Frontier Weekly

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக