"பேரன்புக்குரியவர்களே நான் சொல்லாத ஒரு
கருத்தை, ஒரு தனிப்பட்ட நபர்களுடைய கருத்தை நான் சொன்னதாக ஊடங்களில் பரவலாக
பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு என்பதை நான்
சொல்லிக்கொள்கிறேன். அப்படி ஒரு கருத்தை நான் வெளியிடவே இல்லை என்பதையும்
தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி" என கூறியுள்ளார்.
திங்கள், 18 ஜனவரி, 2021
இளையராஜா : அப்படி ஒரு கருத்தை நான் வெளியிடவே இல்லை
nakkeeran : சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்
ஸ்டுடியோவில் இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளாக ரெக்கார்டிங் பணிகளை
மேற்கொண்டு வந்தார். அவருக்கென தனி ரெக்கார்டிங் தியேட்டா் ஒதுக்கி
கொடுத்திருந்தது பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம். இந்நிலையில்
எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்துவிட்டு, புது
தியேட்டர் கட்ட முடிவு செய்ததால் கடந்த ஒரு வருடமாக பிரசாத் ஸ்டுடியோவில்
இருந்து இளையராஜா காலி செய்து தர வேண்டும் என அவருக்கு நெருக்கடி கொடுத்து
காலி செய்யவைத்தனர். இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்
இதுகுறித்து இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா இன்று பத்திரிகையாளர்களை
சந்தித்து பேசியபோது இளையராஜா மத்திய மாநில அரசுகள் தனக்கு கொடுத்த
விருதுகளை திருப்பி கொடுக்கவுள்ளதாக கூறினார். இந்நிலையில் இதற்கு விளக்கம்
அளித்து இசைஞானி இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக