வியாழன், 14 ஜனவரி, 2021

திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்

DMK ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்: MKS
tamil.cdn.zeenews.com : திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயக் கடன்களும் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் (TN Assembly Election 2021) நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். AIADMK – DMK இடையே எப்போதும் வழக்கம் போல நேரடி போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து கட்சிகளும் குறிப்பிட்ட இடங்களில் சமத்துவ பொங்கல் விழா (Pongal Festival) நடத்தி வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் (MK. Stalin) அவர்கள் சமத்துவ பொங்கல் விழா நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக திண்டார்கள் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின்  ‘ஏழை எளிய குடும்பத்தில் பிறந்திருக்கக்கூடிய நடுத்தர குடும்பத்தில் பிறந்திருக்க கூடிய மாணவர்கள் படித்து அதற்கு பிறகு மருத்துவராக வரமுடியாத சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி வைத்துள்ளது. அனிதாவின் மருத்துவ கனவு தகர்ந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டார். இதுவரை 15 பேர் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளனர். NEET என தனியாக தேர்வு கொண்டு வந்துள்ளனர். இது தமிழ்நாட்டுக்கு (Tamil Nadu) இருக்கக் கூடாது விலக்கு வேண்டும் எனச் சொல்லி தீர்மானம் கொண்டு வந்து ஆதரித்து டெல்லிக்கு அனுப்பி வைத்தோம்.


இன்னும் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். நான் ஒரு உறுதியைக் கொடுக்கிறேன். எப்படி தலைவர் கருணாநிதி முதல்வராக இருக்கும் வரை NEET உள்ளே நுழையவில்லையோ, எப்படி ஜெயலலிதா இருக்கும் வரை NEET நுழைய முடியவில்லையோ அதேப்போன்று நாங்கள் வந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் இல்லாத ஒரு நிலையை உருவாக்குவோம். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை (Assembly Election) சந்தித்தபோது தலைவர் கருணாநிதி 7000 கோடி விவசாயக்கடனை தள்ளுபடி செய்வோம் என அறிவித்தார். 

இலவச மின்சாரம் தந்தது போல் இதையும் துணிச்சலாக அறிவித்தார். எங்களுக்கெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆட்சிக்கு வந்தாயிற்று நாங்கெலெல்லாம் நம்பிக்கை இல்லாமல் அவரிடம் போய் கேட்டோம். ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் அல்ல ரூ.7000 கோடி எப்படி கொடுக்க போகிறீர்கள் என்று கேட்டோம். கடன் வாங்கியவர்கள் பெரும்பாலும் அதிமுகவினரே அதிகம் என்று கேட்டோம். அதற்கு அவர் சொன்னார் எனக்கு கட்சிக்காரர்கள் பற்றித் தெரியாது, அவர்கள் அனைவரையும் விவசாயிகளாகப் பார்க்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக