Hema Sankar : தற்சார்பு, இயற்கை விவசாயம், லட்சத்தில் சம்பாதிக்கலாம், ஆடு மாடு மேய்ப்பதை அரசு வேலை ஆக்குவோம், படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லனு சொல்லி எத்தன பேர் குடிய கெடுத்துற்கானுங்கனு தெரியல.
இந்த நாம் தமிழர், முன்னோர் ஒன்றும் முட்டாள் இல்லை கும்பல் , இயற்கை மருத்துவம்னு சொல்ற ஹீலர் கோஷ்டி, வாட்சப் மெசேஜ்ல வரும் அத்தனையும் உண்மைனு நம்ப வெக்கற கூட்டம் ,
இது எல்லாமே தமிழ் நாட்டுல கடந்த சில ஆண்டுகளா பரவிட்டே இருக்காங்க.
இவங்க சொல்ற எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனிச்சா ஒன்னு மட்டும் புரியும் ‘ கல்வி என்பது இரண்டாம் பட்சம் தான்னு’ பிள்ளைகள் மனசுல எங்கயோ பதிய வெக்கறாங்க.
கல்வியால் வர சமூக மற்றும் அறிவியல் மாற்றத்தையோ, பொருளாதார முன்னேற்றத்தையோ, தரமான வாழ்வியலையோ , பகுத்தறிவு சிந்தனையோ, நமக்கு துளியும் எழக்கூடாதுனு தெளிவா இருக்காங்க.
தமிழ் குடினு சொல்லி சாதிய கண்டறிஞ்சி , நமக்கே தெரியாம கொம்பு சீவி விட்றவங்களும் இவங்க தான்.
முன்பை விட இன்னும் ஆக்கப்பூர்வமா இவங்கள விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயமும், தேவையும் இருக்கு.
சங்கிகளும், தமிழ் தம்பிகளும் ஒன்னு.they are the real threat for our inclusive social development.
இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸ்ல கூட நாங்க பார்க்க விரும்பலைடா
பதிலளிநீக்கு